நாமக்கல்லில் மிகவும் பிரசித்திபெற்ற கோயிலாக ஆஞ்சநேயர் கோயில் திகழ்ந்துவருகிறது. இங்கு, 18 அடி உயரம் கொண்ட விக்கிரகத்துக்கு  எட்டடி உயரத்தில் அர்ச்சகர்கள் நடந்துசெல்லும் வகையில் நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. 

பீடத்தில் இருந்து 22 அடியும், பாதத்தில் இருந்து 18 அடியும் உயரம் கொண்டதாக உள்ளது. 18 அடி உயரமுள்ள ஒற்றை கல்லினால் ஆனது. இந்த ஆஞ்சநேயருக்கு அபிஷேகம், அலங்காரம் செய்ய 8 அடி உயரத்திலாலான ஏணி போன்ற மேடை அமைக்கப்பட்டுள்ளது. 

இதன்மீது நடந்து சென்றே ஆஞ்சநேயருக்கு பல்வேறு பூஜைகளை அர்ச்சகர்கள் செய்துவந்தனர். இதேபோல, நேற்று முன்தினம் அர்ச்சகர் வெங்கடேஷ், பக்தர் ஒருவர் அளித்த துளசி மாலையை விக்கிரகத்துக்கு அணிவித்தார். சிறிது நேரம் நேராக நின்றுகொண்டிருந்தவர், பின்னர் நிலைதவறித் தடுமாறி, 8 அடி உயரத்தில் இருந்து தலைகுப்புற விழுந்தார். 

இதில், அர்ச்சகருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சக அர்ச்சகர்கள் மற்றும் கோயில் நிர்வாகிகள் உடனடியாக சேலம் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு அவர் காலமானார். இதனையடுத்து நேற்று அதிகாலை மரண மடைந்தார் எனும் அதிர்ச்சி தகவல் பரவியதால் ஆஞ்சநேயர் பக்தர்களை வேதனையில் ஆழ்த்தியது.

ஆஞ்சநேயர் பலருக்கும் இஷ்ட தெய்வமாக இருக்கிறார். அனுமன் ஜெயந்தி விழா  வட மாநிலங்களிலும், கர்நாடகாவிலும் லச பூஜை, சுதர்சன யாகம், அனுமந்த யாகம் உள்ளிட்ட யாக பூஜைகள் என கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆஞ்சநேயர் கோயில் வரலாற்றில்  அர்ச்சகர் ஒருவர் மரணமடைந்தது இதுவே முதல் முறை, அர்ச்சகர் மரண செய்தி நாடு முழுவதும்  உள்ள ஆஞ்சநேயர் பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.