Andra plan to built to 3 check dam across Balar
தமிழக அரசின் ஒப்புதல் இன்றி பாலாற்றின் குறுக்கே, மேலும் மூன்று இடங்களில் தடுப்பணைகளைக் கட்ட, ஆந்திரா அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உற்பத்தியாகும் பாலாறு, அங்கு 93 கிலோ மீட்டரும், ஆந்திராவில் 33 கிலோ மீட்டரும், தமிழகத்தில் 222 கிலோ மீட்டரும் பயணித்து காஞ்சிபுரம் மாவட்டத்தில், வங்க கடலில் கலக்கிறது.
பாலாறு பல மாநிலங்கள் வழியான ஓடும் நதி என்பதால், தமிழக அரசின் ஒப்புதல் பெறாமல், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்கள், நீர் சேமிக்கும் கட்டமைப்புகளை அமைக்க முடியாது.
ஆனால், இந்த விதி முறைகளை மீறி , குப்பம், சதானந்தசேரி உள்ளிட்ட, 12 இடங்களில், ஆந்திர அரசு, தடுப்பணைகளை கட்டியுள்ளது.
இதனால், தமிழக பகுதிகளில் ஓடும் பாலாற்றுக்கு தண்ணீர் வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் பாலாறு வறண்டே காணப்படுகிறது.
இந்நிலையில், சித்துார் மாவட்டத்தில், குப்பத்திற்கு மேல் பகுதியில் இரண்டு தடுப்பணைகளும், , கீழ் பகுதியில் ஒரு தடுப்பணையும் என மூன்று தடுப்பணைகளை கட்ட, ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது.
மூன்று தடுப்பணைகள் கட்டுவதற்கான, சாத்தியக்கூறு அறிக்கை தயாரிப்பு பணியில், அம்மாநில பொதுப் பணித்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இத்திட்டத்திற்கு, மத்திய அரசின் நிதியுதவி பெறவும், ஆந்திர அரசு முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த 3 தடுப்பணைகள் கட்டப்பட்டால், வேலுார், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்கள் முற்றிலுமாக வறண்டு போகும் தமிழக விவசாயிகள் அஞ்சுகின்றனர்.
