யானை தாக்கி 3 ஆண்டுகளில் 152 பேர் உயிரிழப்பு.. தடுப்பதற்கான திட்டத்தை அரசு சிந்திக்கவில்லை- அன்புமணி ஆவேசம்

32 நாட்களில் மட்டும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் யானைகள் தாக்கி மூன்று பெண்கள், 2 ஆண்கள் என 5 பேர் இறந்துள்ளதாக அன்புமணி தெரிவித்துள்ளார். எனவே மனித- விலங்கு மோதங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார். 

Anbumani requested to set up a special force to control the entry of wild animals into the town KAK

மனித- விலங்குகள் மோதல்

தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் ஒரு மாதத்தில் யானை தாக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் 152 பேர் யானைகளால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில், அதிலும் குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலையோரம் அமைந்துள்ள மாவட்டங்களில் மனித & விலங்குகள் மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. மனித & விலங்குகள் மோதலுக்கு வனப்பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு, வனப்பகுதிகளை மனிதர்கள் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்தல், யானைகள் வலம் வரும் பகுதிகள் மனிதர்களால் அழிக்கப்படுதல் உள்ளிட்ட பல காரணங்கள் கூறப்படுகின்றன. 

Anbumani requested to set up a special force to control the entry of wild animals into the town KAK

3ஆண்டில் 152 பேர் பலி

கடந்த காலங்களில் இழைக்கப்பட்ட இந்தத் தவறுகளை சரி செய்வதற்கான நடவடிக்கைகள் மத்திய, மாநில அரசுகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் போதிலும், அவற்றின் மூலம் இதுவரை எதிர்பார்த்த பயன்கள் கிடைக்கவில்லை, இனி கிடைக்குமா? என்பதும் தெரியவில்லை. மனித & விலங்குகள் மோதலால் உயிரிழப்புகள் மட்டுமின்றி, பொருள் இழப்புகளும் மிக அதிகமாக ஏற்படுகின்றன. ஜனவரி 17ஆம் நாள் முதல் பிப்ரவரி 19 வரையிலான 32 நாட்களில் மட்டும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் யானைகள் தாக்கி மூன்று பெண்கள், 2 ஆண்கள் என 5 பேர் இறந்துள்ளனர். கடந்த 2019 முதல் 2022 வரையிலான 3 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் புலிகள் மற்றும் யானைகள் தாக்கி 1700 பேர் உயிரிழந்திருப்பதாகவும், தமிழ்நாட்டில் யானைகள் தாக்குதலில் மட்டும் 152 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன.

Anbumani requested to set up a special force to control the entry of wild animals into the town KAK

உரிய இழப்பீடும் வழங்குவது இல்லை

மற்றொருபுறம் வன விலங்குகள் தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் வேளாண் விளைபொருட்கள் சேதமடைந்துள்ளன. விலங்குகள் தாக்குதலில் கொல்லப்படுவோரின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அண்மையில் தமிழக அரசு அறிவித்தது. ஆனாலும், விலங்குகளால் கொல்லப்படும் உயிர்களுக்கும், சேதமடையும் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படுவதில்லை. சில பகுதிகளில் முதல்கட்ட இழப்பீட்டை மட்டும் வழங்கும் தமிழக அரசு, மீதத் தொகையை வழங்கவில்லை.யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் வனத்தை விட்டு வெளியே வருவதை உடனடியாக தடுப்பது என்பது உடனடியாக சாத்தியமில்லை.

Anbumani requested to set up a special force to control the entry of wild animals into the town KAK

விலங்கு மோதல்களை தடுக்க தனிப்படை

மாறாக, வனத்தை விட்டு யானைகள் உள்ளிட்ட விலங்குகள் வெளியே வருவதை கண்காணித்து,  அவற்றை மீண்டும் வனத்திற்குள் அனுப்பி வைப்பது தான் பயனளிக்கும் தீர்வாக இருக்கும். அதற்காக தனிப்படைகள் அமைக்க வேண்டியது கட்டாயம் ஆகும். ஆனால், ஆக்கப்பூர்வமான இந்தத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து தமிழக அரசு இன்னும் சிந்திக்கக் கூட இல்லை என்பது தான் உண்மை. ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களிலும் மனித& விலங்கு மோதல் பெரும் சிக்கலாக உருவெடுத்து வருகிறது. அதை சமாளிப்பதற்காக அந்த மாநிலங்களில் ஒவ்வொரு சரகத்திலும் வனச்சரக அலுவலர்  தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.  அப்படைகள் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவதால் ஆந்திரம், கர்நாடகத்தில் மனித & வன விலங்குகள் மோதல் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்திருக்கின்றன.

Anbumani requested to set up a special force to control the entry of wild animals into the town KAK

தற்காலிக தண்ணீர் தொட்டி

எனவே, தமிழக வனத்துறையில் வன விலங்குகள் ஊருக்குள் நுழைவதை கண்காணித்து காட்டுக்குள் மீண்டும் அனுபுவதற்கான தனிப்படைகளை அமைக்க வேண்டும்; வனப் பகுதிகளின் பரப்பளவை குறைக்க வேண்டும்.  கோடைக்காலத்தில் வனத்தில் ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக விலங்குகள்  ஊர்களுக்குள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், எந்தெந்த வனப்பகுதிகளில் எல்லாம் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என்பதை முன்கூட்டியே கணித்து அங்கெல்லாம் விலங்குகளுக்கு தற்காலிக தண்ணீர் தொட்டிகளை திறக்க வேண்டும். இந்த நடவடிக்கைகளின் மூலம் தமிழ்நாட்டில் மனித & விலங்கு மோதல் நிகழாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துவதாக அன்புமணி தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

உயருகிறதா வெங்காயத்தின் விலை.? ஒரு கிலோ வெண்டைக்காய், கேரட், முருங்கைக்காய் விலை என்ன தெரியுமா.?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios