உயருகிறதா வெங்காயத்தின் விலை.? ஒரு கிலோ வெண்டைக்காய், கேரட், முருங்கைக்காய் விலை என்ன தெரியுமா.?
சென்னை கோயம்பேடு சந்தைக்கு தமிழகம் மட்டுமின்றி பங்வேறு மாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. அந்த வகையில் ஒரு சில காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால் விற்பனை விலை அதிகரித்துள்ளது. கேரட், வெண்டைக்காய், பீட்ரூட் போன்ற காய்கறிகள் விலை சற்று உயர்ந்துள்ளது.
தக்காளி விலை என்ன.?
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 55 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அவரைக்காய் விலை என்ன.?
வாழைப்பூ ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 65 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
vegetables
முருங்கைக்காய் விலை என்ன.?
கேரட் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெண்டைக்காய் விலை என்ன.?
இஞ்சி ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படியுங்கள்
தூங்குவதற்கு முன்பு ஒருபோதும் இந்த உணவுகளை சாப்பிடாதீங்க.. பல பிரச்சனைகள் ஏற்படலாம்..