Asianet News TamilAsianet News Tamil

இனி தேவையில்லாமல் ஒரு மரம் கூட வெட்டக்கூடாது..! திமுக அரசுக்கு கோரிக்கை விடும் அன்புமணி

செங்கல்பட்டில் 40 ஆண்டு ஆலமரம் வெட்டி வீழ்த்தப்பட்டது கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ள அன்புமணி  குற்றமிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Anbumani insisted that no tree should be cut unnecessarily in Tamil Nadu
Author
First Published Feb 28, 2023, 12:48 PM IST

40 ஆண்டுகால மரம் வெட்டப்பட்டது

செங்கல்பட்டில் 40 ஆண்டுகால ஆலமரம் வெட்டபட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி, குற்றமிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், செங்கல்பட்டு மாவட்டம், சூனாம்பேடு கிராமத்தில் சாலையோரம் இருந்த 40 ஆண்டு ஆலமரம் சட்டவிரோதமாக வெட்டி வீழ்த்தப்பட்டிருக்கிறது.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து கமல் விலகல்

 

சட்டப்படி நடவடிக்கை

இது கண்டிக்கத்தக்கது. ஆலமரம் வெட்டப்பட்டதற்கு இரங்கல் தெரிவித்து பசுமைத்தாயகம் அமைப்பும், பொதுமக்களும் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதை தவிர்க்க, கிளைகளை மட்டுமே வெட்ட அரசு அனுமதி அளித்த நிலையில் ஒட்டு மொத்த மரமும் சிலரால் வீழ்த்தப்பட்டது பெருங்குற்றம். இதற்கு காரணமானவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்.

Anbumani insisted that no tree should be cut unnecessarily in Tamil Nadu

இனியும் ஒரு மரம் வெட்டக்கூடாது

40 ஆண்டுகள் அரும்பாடுபட்டு வளர்க்கப்பட்ட ஆலமரம் சிலரின் சுயநலத்திற்காக வீழ்த்தப்படுவதை அரசு அனுமதிக்கக்கூடாது. வெட்டப்பட்ட ஆலமரத்தை மீண்டும் அதே இடத்தில் நட்டு பாதுகாக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் தேவையில்லாமல் ஒரு மரம் கூட வெட்டப்படக்கூடாது. அதற்காக தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட மாநில,  மாவட்ட பசுமைக் குழுக்கள் அனைத்து மாவட்டங்களிலும் முழு அளவில் செயல்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படியுங்கள்

முக்கிய தேர்வுகளை முறையாக கையாள தெரியாத திமுக அரசு..! குரூப் 2 தேர்வை ரத்து செய்திடுக- எடப்பாடி பழனிசாமி

Follow Us:
Download App:
  • android
  • ios