Asianet News TamilAsianet News Tamil

வெற்றி மீது வெற்றி குவியும்.. பல தவறுகள் திருத்தப்படும்- தமிழகத்தின் மீதான இருள் விலகி ஒளி பிறக்கும் -அன்புமணி

அரசியல், சமூகநீதி, வாழ்வுரிமை உள்ளிட்ட பல துறைகளில் கடந்த ஆண்டுகளில் நிகழ்த்தப்பட்ட பல தவறுகள் புத்தாண்டில் திருத்தப்படும். தங்களின் நலனுக்காகவும், தங்களின் உரிமைகளுக்காகவும் உண்மையாக போராடக்கூடியவர்கள் யார்? என்பதை மக்கள் அறிந்து அங்கீகரிக்கும் ஆண்டாக அமையும் என அன்புமணி தெரிவித்துள்ளார். 

Anbumani hopes that the darkness over Tamil Nadu will end in the new year KAK
Author
First Published Dec 31, 2023, 8:40 AM IST | Last Updated Dec 31, 2023, 8:40 AM IST

ஆங்கில புத்தாண்டு வாழ்த்து

ஆங்கிலப்புத்தாண்டையொட்டி பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இனி நடப்பவை எல்லாம் நல்லவையாகவே இருக்கும் என்ற நம்பிக்கையுடன் ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பை  கொண்டாடும் சொந்தங்கள் அனைவருக்கும்  இதயங்கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். புத்தாண்டு பிறப்பு என்பது ஆண்டுக்கு ஒரு முறை வழக்கமாக வந்து போகும் நிகழ்வல்ல. ஒவ்வொரு ஆண்டும் மனிதகுலத்தின் மனதில் புத்துணர்வையும், புது நம்பிக்கையையும் விதைப்பதற்கான உன்னத திருநாள் ஆங்கிலப் புத்தாண்டு ஆகும். ஓராண்டில் ஆயிரமாயிரம் ஏமாற்றங்கள், வருத்தங்கள், கவலைகள் இருந்தாலும், அவை அனைத்தையும் நாட்காட்டியுடன் சேர்த்து ஒதுக்கி வைத்து விட்டு, 

Anbumani hopes that the darkness over Tamil Nadu will end in the new year KAK

புத்தாண்டில் திருத்தம்

புதிதாக பிறக்கப் போகும் ஆண்டில் எத்தனை சவால்கள் வந்தாலும் அவற்றை துணிச்சலுடன் எதிர்த்து நின்று வீழ்த்தும் நம்பிக்கையையும், உத்வேகத்தையும் நமக்கு அளிப்பது புத்தாண்டு தான். அதை எவரும் மறுக்க முடியாது. தமிழ்நாட்டின் வரலாற்றில் 2024ஆம் ஆண்டு தவிர்க்க முடியாத ஆண்டாக அமையப்போவது நிச்சயம். அரசியல், சமூகநீதி, வாழ்வுரிமை உள்ளிட்ட பல துறைகளில் கடந்த ஆண்டுகளில் நிகழ்த்தப்பட்ட பல தவறுகள் புத்தாண்டில் திருத்தப்படும். தங்களின் நலனுக்காகவும், தங்களின் உரிமைகளுக்காகவும் உண்மையாக போராடக்கூடியவர்கள் யார்? என்பதை மக்கள் அறிந்து அங்கீகரிக்கும் ஆண்டாக அமையும்.

Anbumani hopes that the darkness over Tamil Nadu will end in the new year KAK

வெற்றி மீது வெற்றி

தமிழ்நாட்டின் நலன்கள், உரிமைகள் ஆகியவற்றின் மீது படிந்த இருள் விலகி, ஒளி பிறக்க ஆங்கிலப் புத்தாண்டு வகை செய்யப்பட்டும். புத்தாண்டில் தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து நலன்களும், வளங்களும், மகிழ்ச்சி, வளர்ச்சி, அமைதி, மனநிறைவு, நல்லிணக்கம், சகோதரத்துவம் உள்ளிட்ட அனைத்தும் கிடைப்பதுடன், நமக்கு வெற்றி மீது வெற்றிகளை வழங்கும் ஆண்டாகவும் 2024 ஆம் ஆண்டு அமையும் என்று கூறி, அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை  ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக அன்புமணி தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

ஆங்கில புத்தாண்டு! வாழ்த்து சொல்ல என்னை யாரும் சந்திக்க வரவேண்டாம்! திமுகவினருக்கு ஸ்டாலின் போட்ட உத்தரவு.!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios