சாக்கடை நாற்றத்தை மறக்க மது தான் தீர்வா.? அதைவிட கொடிய நாற்றம் மது- அமைச்சருக்கு எதிராக சீறும் அன்புமணி

நாற்றத்தை மறக்க மது தான் தீர்வு என்றால், அதை விட கொடிய நாற்றத்துடன் மதுவை அருந்தி விட்டு வீட்டுக்கு வரும் கணவனை சகித்துக் கொள்ள முடியாமல் மனைவிகள் அனுபவிக்கும் கொடுமைகளுக்கு அமைச்சர் என்ன தீர்வு வைத்திருக்கிறார்? என அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். 
 

Anbumani condemned Minister Muthusamy comment on drinking alcohol in the morning

காலையில் மது விற்பனை

காலையில் மது விற்பனை தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் முத்துசாமி, காலையில் மது அருந்துபவர்களை குடிகாரன் என்று யாராவது சொன்னால், அதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. சாக்கடை அடைத்திருந்தால், மூக்கைப் பிடித்துக் கொண்டு வீட்டினுள் சென்றுவிடுகிறோம். அதை சுத்தம் செய்வதற்கு யார் வருகிறார்கள்? அப்படிப்பட்டவர்களை ஏன் கேவலப்படுத்துகிறீர்கள்? எனவே, மாற்று வழி என்ன என்பதை கண்டுபிடிக்கலாம் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்திருந்தார். இந்த கருத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.  இந்தநிலையில் இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில், 

Anbumani condemned Minister Muthusamy comment on drinking alcohol in the morning

சாக்கடை நாற்றம்

காலையில் சாக்கடை தூய்மை செய்யும் பணிக்கு செல்பவர்கள் நாற்றத்தை சகித்துக் கொள்ள தவிர்க்க முடியாமல் மது அருந்துகிறார்கள். அவர்களை குடிகாரர்கள் என்று சொல்லக் கூடாது; அதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது என்று மதுவிலக்குத்துறை அமைச்சர் முத்துசாமி கூறியிருக்கிறார். இதையெல்லாம் எந்த வகை தத்துவத்தில் சேர்ப்பது என்று தெரியவில்லை. சாக்கடைகளை தூய்மைப்படுத்தும் போது நாற்றத்தை சகித்துக் கொள்ள முடியாது என்பது உண்மை தான். அதற்கான தீர்வு சாக்கடைகளை தூய்மை செய்வது உள்ளிட்ட பணிகளை எந்திரமயமாக்கி, அதில் ஈடுபட்டுள்ள பணியாளர்களை  அடுத்தடுத்த நிலையில்  உள்ள பணிகளுக்கு உயர்த்துவது தான் சமூக நீதி!

Anbumani condemned Minister Muthusamy comment on drinking alcohol in the morning

காலையிலேயே மது கொடுக்க வேண்டும் என்று துடிப்பது மது நீதி

மாறாக, சாக்கடை தூய்மை செய்யும் பணிகளில் உள்ளவர்களுக்கு காலையிலேயே மது கொடுக்க வேண்டும் என்று துடிப்பது மது நீதி. அது மிகவும் ஆபத்தானது. நாற்றத்தை மறக்க மது தான் தீர்வு என்றால், அதை விட கொடிய நாற்றத்துடன் மதுவை அருந்தி விட்டு வீட்டுக்கு வரும் கணவனை சகித்துக் கொள்ள முடியாமல் மனைவிகள் அனுபவிக்கும் கொடுமைகளுக்கு அமைச்சர் என்ன தீர்வு வைத்திருக்கிறார்? என அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். 

இதையும் படியுங்கள்

அதிமுக அமைச்சர்களுக்கு ஒரு சட்டம், மற்றவர்களுக்கு ஒரு சட்டமா?- ஆளுநருக்கு எதிராக சீறும் காங்கிரஸ்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios