எலும்புக்கூடாக 35 நாட்களுக்கு பிறகு கண்டெடுக்கப்பட்ட அமமுக நிர்வாகி உடல்...!

கோவையில் கொலை செய்யப்பட்ட அமமுக நிர்வாகி 32 நாட்களுக்குப்பின் கிணற்றில் இருந்து எலும்புக்கூடாக மீட்கப்பட்டுள்ளது. 

AMMK party dead...Body Found

கோவையில் கொலை செய்யப்பட்ட அமமுக நிர்வாகி 32 நாட்களுக்குப்பின் கிணற்றில் இருந்து எலும்புக்கூடாக மீட்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் ஏரலை சேர்ந்தவர் ஜெயவேணு(36). கோழிக்கடை உரிமையாளர். இவர், ஏரல் நகர அ.ம.மு.க செயலாளராக இருந்தார். இவர், கடந்த அக்டோபர் 1-ம் தேதி கோவை நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வந்தபோது மாயமானார். அவரது மனைவி பாலதீபா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில்  கோவை துடியலூரில் உள்ள சித்தி மகன் ராஜேஷ் அழைத்ததன் பேரில் நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல கணவர் ஜெயவேணு சென்றதாகவும், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவித்தார். இதையடுத்து துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

  AMMK party dead...Body Found

இதில் ஜெயவேணுவுடன் ராஜேஷ்(35) மற்றும் அவரது நண்பர் சுரேஷ்(33) ஆகியோர் கடந்த நவம்பர் மாதம் 20-ம் தேதி ஒன்றாக சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்ததும் தெரியவந்தது. பிறகு, சடலத்தை இருவரும் சேர்ந்து வரப்பாளையம் பகுதியில் உள்ள கிணற்றில் வீசிவிட்டு தப்பியதும் தெரியவந்தது. இதற்கிடையில், கொலை நடந்து சில தினங்களில் சுரேஷ், தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம் தொடர்பாக ராஜேசை கைது செய்து போலீசார் விசாரித்தனர். AMMK party dead...Body Found

அப்போது, அவர் அளித்த தகவலின்படி, துடியலூர் போலீசார் வரப்பாளையம் கிணற்றில் ஜெயவேணுவின் சடலத்தை தேடி வந்தனர். இந்த கிணற்றில் இருந்து டன் கணக்கில் குப்பைகள் அகற்றப்பட்டன. 32வது நாளாக நேற்று தேடும் பணி நடைபெற்றது. அப்போது கிணற்றில் 140 அடி ஆழத்தில் அவரது எலும்பு கூடாக கண்டுபிடிக்கப்பட்டது. கோவை அரசு மருத்துவமனை டாக்டர் குழுவினர் அதே பகுதியில் பிரதே பரிசோதனை செய்தனர். இவரது உடலை தேடுவதற்காக 200 டன் குப்பைகளை அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios