தொகுதி மறுவரையறை காரணமாக தமிழகத்தில் ஒரு தொகுதி கூட குறையாது என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.
ஈஷா யோகா மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக அமித்ஷா தமிழகம் வந்துள்ளார். இன்று கோவையில் புதிய பாஜக அலுவலகத்தை திறந்து வைத்த அவர், திருவண்ணாமலை மற்றும் ராமநாதபுரத்தில் பாஜக மாவட்ட அலுவலகங்களை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் மெண்டலி பிட்டா என மருத்துவர்கள் பரிசோதிக்கனும்.! அண்ணாமலை அதிரடி
திமுகவை கிண்டல் செய்த ஷா, ஊழலில் ஈடுபட்டவர்கள் மு.க.ஸ்டாலின் கட்சியில் உறுப்பினராக இணைய வேண்டும் என்றார்.
"சில நேரங்களில் திமுகவில் உள்ள அனைத்து ஊழல்வாதிகளையும் உறுப்பினர் சேர்க்கை மூலம் திமுகவில் சேர்த்தது போல் உள்ளது. மு.க.ஸ்டாலினும் அவரது மகனும் உண்மையான கவலைகளில் இருந்து திசை திருப்ப பல பிரச்சினைகளை எழுப்புகின்றனர். இன்று, அவர்கள் தொகுதி மறுவரையறை குறித்து ஒரு கூட்டம் நடத்த உள்ளனர். தொகுதி மறுவரையறைக்குப் பிறகும், தென்னிந்தியாவில் உள்ள எந்த மாநிலங்களின் ஒரு தொகுதி கூட குறைக்கப்படாது என்று பிரதமர் மோடி தெளிவுபடுத்தியுள்ளார்." என்று கூறினார்.
2026-ல் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என்றும், தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) ஆட்சி அமைக்கும் என்றும் ஷா மேலும் கூறினார். வாரிசு அரசியலையும், ஊழலையும் ஒழிப்பதாகவும், தேச விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை நீக்குவதாகவும் அவர் உறுதியளித்தார்.
கோவையில் கெத்து காட்டும் பாஜக.! புதிய அலுவலகம் திறப்பு விழா- அமித்ஷாவிற்கு பூரண கும்ப மரியாதை
