- Home
- Tamil Nadu News
- தமிழக முதல்வர் ஸ்டாலின் மெண்டலி பிட்டா என மருத்துவர்கள் பரிசோதிக்கனும்.! அண்ணாமலை அதிரடி
தமிழக முதல்வர் ஸ்டாலின் மெண்டலி பிட்டா என மருத்துவர்கள் பரிசோதிக்கனும்.! அண்ணாமலை அதிரடி
தமிழகத்தில் தொகுதி மறுசீரமைப்பு குறித்து ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். மத்திய அரசு எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டம் எதற்கு என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் மெண்டலி பிட்டா என மருத்துவர்கள் பரிசோதிக்கனும்.! அண்ணாமலை
தமிழகத்தில் திமுக- பாஜக இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு நிதி வரவில்லையென திமுக அரசும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதாகவும், பாலியல் குற்றங்கள் அதிகரித்து இருப்பதாக பாஜகவும் விமர்சிக்கிறது. இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று தமிழக அமைச்சரவை முடிவடைந்ததும் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 8 தொகுதிகளில் பறிபோகும் நிலை இருப்பதாக தெரிவித்துள்ளார். மத்திய அரசின் தொகுதி மறுசீரமபைப்பால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகி இருப்பதாக கூறினார்.
Tamil Nadu Chief Minister MK Stalin
எனவே தமிழக உரிமையை நிலைநாட்டும் வகையில் அனைத்து கட்சி கூட்டமானது மார்ச் 5ஆம் தேதி நடைபெற இருப்பதாக தெரிவித்தார். தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 40 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறுகையில், தொகுதி மறு சீராமைப்பில் தமிழகத்திற்க்கு பாதிப்பு என முதல்வருக்கு யார் சொன்னது என்று தெரியவில்லை. இன்னும் மக்கள்.தொகை கணகெடுப்பு கூட நடத்தவில்லையென தெரிவித்தார்.
தொகுதி சீரமைப்பு- அண்ணாமலை கேள்வி
மத்தியில் யாருமே தொகுதி மறு சீரமைப்பு பற்றி பேசாத பட்சத்தில் இப்போது தொகுதி மறுசீரமைப்பு பேசக்காரணம். ஏன் என கேள்வி எழுப்பியவர், மும்மொழி விவாகரத்தில் திமுகவினர் தோற்றுவிட்டார்கள். மக்களிடம் மும்மொழி பிரச்சனை எடுபடவில்லை. அதை மடைமாற்றம் செய்யவேண்டுமென்றே இப்போது தொகுதி குறைப்பு பிரச்சனையை எழுப்புகிறார்கள் என விமர்சித்தார். மத்தியில் எந்த அறிவிப்பும் வராத நிலையில் அனைத்து கட்சி கூட்டம் எதற்கு என கேள்வி எழுப்பினார். மறுசீரமைப்பு தொடர்பாக மத்திய அரசின் அறிவிப்பு வரும் போது பாஜக குரல் கொடுக்கும் என தெரிவித்தார்.
முதலமைச்சரை பரிசோதிக்கனும்
அமெரிக்க ஜனாதிபதிக்கு வருடம் ஒரு முறை மருத்துவர்கள் மெண்டலி பிட்டா என சோதிப்பார்கள் அந்த வகையில் தமிழக முதல்வருக்கும் சோதனை செய்ய வேண்டும் என கடுமையாக விமர்சித்த அண்ணாமலை, முதல்வருக்கு இது போன்ற அறிவிப்பு வந்தது என்று குருட்டு பூணை விட்டத்தை பார்த்து பாயுமா என்ற பழமொழிக்கு ஏற்றவாறு முதல்வர் பேசியிருக்கிறார் என அண்ணாமலை கூறினார்.