alternate job for tasmac staffs
தமிழகத்தில் பூரண மது விலக்கு அமல்படுத்த வேண்டும் என பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், பலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் நடந்து வருகின்றன.
இதையொட்டி கடந்த ஆட்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 500 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டார்.
மேலும், நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை, உடனடியாக அகற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் மூலம் கூடுதலாக 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.
இதை தொடர்ந்து கடந்த மாதம் முதலமச்சராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமி, தனது முதல் கையெழுத்தாக 500 டாஸ்மாக் கடைகள் அகற்றப்படும் என வெளியிட்டார்.
ஆனால், மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளில் வேலை செய்த சூபர்வைசர், விற்பனையாளர் ஆகியோருக்கு மாற்று வேலை குறித்து எவ்வித தகவலும் கூறவில்லை. வேறு பகுதியில் உள்ள கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், மூடப்பட்ட டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு மாற்று பணி வழங்கப்பட்டதற்கான அரசாணையை அரசு வெளியிடபட்டுள்ளது.
ஏற்கனவே உள்ள டாஸ்மாக் கடைகளில் ஊழியர்களுக்கு பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வாரம், டாஸ்மாக் பணியாளர்கள் மாற்றுத்துறைகளில் பணி வழங்க கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
