திருச்சி கிழக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் முன்னாள் ஆளும் கட்சிகளான திமுக, அதிமுகவை முதல்வர் விஜய் கடுமையான விமர்சித்திருந்த நிலையில் முதல்வரின் பேச்குக்கு அதிமுக காட்டமான பதிலடி கொடுத்துள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் தமக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு முதல்வரும், தவெக தலைவருமான விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் பேசிய முதல்வர் விஜய் திமுக, அதிமுகவை கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த நிலையில் முதல்வரின் பேச்சுக்கு காட்டமான பதிலடி கொடுத்துள்ள அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், “
NARCISSISTIC SPEECH! (தற்பெருமை பேச்சு)
இன்றைய முதல்வரின் உரையை குறிப்பிட சரியான வார்த்தை இது தான்!
தான் இருக்கும் பதவிக்கான பொறுப்பை கொஞ்சம் கூட உணராமல், எந்தவொரு தவறுக்கும் பொறுப்பேற்க மனமில்லாமல் ஆச்சரியக்குறித்தனமாக பேசியுள்ளார்.
சட்டம் ஒழுங்கை சீர்செய்ய காவல்துறைக்கு அதிகாரிகளை நியமித்துவிட்டால் போதுமா? நிர்வாகம் தானாக செயல்படுமா?என்னயா புது உருட்டா இருக்கு இதெல்லாம்..?!!
இவர் மீது பழி போடுகிறார்களாம்… தனது ஆட்சியில் இத்தனை குற்றங்கள் நடக்கிறதே, இத்தனை மரணங்கள், பெண்கள் பாதுகாப்பு இல்லையே.. இதைப் பற்றியெல்லாம் கொஞ்சம் கூட உங்கள் முகத்திலோ, பேச்சிலோ கவலை, வருத்தம் தெரிந்ததா? இதை சரிசெய்ய வேண்டும் என்ற Responsibility தெரிந்ததா? இது Narcissism இல்லாமல் வேறென்ன?
“எல்லாத்துக்கும் முந்தைய ஆட்சி தான் காரணம்” என்று சொல்வது பெயர் தான் மாற்றமா? முந்தைய ஆட்சியில் நிதி மோசமாக இருந்ததை இப்போது தான் கண்டுபிடித்தீர்களா?
இதில், இவர் ஆட்சிக்கு வரக்கூடாது என கூட்டு சதி செய்தார்களாம், சூழ்ச்சி செய்தார்களாம்… அப்புறம்?
கத்தி பேசுனா, கத்தி பட டயலாக் modulation-ல பேசுனா, பொய் எல்லாம் உண்மை ஆகிடுமா? தான் பேசுவதற்கு ஏதாவது ஆதாரத்தை இன்றைய முதல்வர் காட்ட முடியுமா ?
மாறாக, ஆட்சிக்கு வருவதற்கு முன்னே தவெக நடத்தத் துவங்கிய குதிரை பேரத்திற்கு அவர்கள் வெளியிட்ட அமமுக மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினரின் கையெழுத்து வீடியோவே சாட்சி நம்பர் 1!
இவ்வளவு வாய்கிழிய பேசும் மானஸ்தர், அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை அதிகார வலைவீசி விலைபேசி, தலைமைச் செயலகத்தின் கீழ்மாடியில் ராஜினாமா செய்ய வைத்து, மேல்மாடியில் கட்சி இணைப்பு விழா நடத்திய அரசியல் கேவலத்தை (வரப்போகும் வழக்கின் முக்கியமான சாட்சி) பற்றி ஏன் ஒருவார்த்தை கூட பேசவில்லை?
எங்களை “மற்றும் பலர்” என்று வாயளவில் சொல்லும் இவர்கள், அடுத்து இங்கிருந்து யாரை இழுக்கலாம் என்றே மனதளவில் 24 மணிநேரமும் அஇஅதிமுக நினைப்பாகவே இருப்பது ஏன்?
ஆனா ஒன்னு…
ரெண்டே பேருக்கு நடுவுல தான் போட்டியே…
எதுல? மக்களை ஏமாத்துறதுல, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருப்பதுல..!!
அதுல நீங்க திமுகவை மிஞ்சி தான் இருப்பீங்க போல!
எல்லோரையும் எல்லா நேரமும் ஏமாற்ற முடியாது என்பதை மட்டும் நினைவிற்கொள்க!
(பி.கு. : நீங்க கோட்டு போடுங்க.. போயஸ் கார்டன்ல வீடு கூட வாங்குங்க… யாரு கவலைப்பட்டா? உலகமே உங்களை சுத்தி தான் இயங்குற மாதிரி சும்மா நசநச ன்னு புலம்பிட்டு இருக்காதீங்க)” என்று குறிப்பிட்டுள்ளது.


