after 7 years gun shoot in thoothukudi
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நேற்று நடைப்பெற்ற போராட்டத்தில், 11 பேர் உயிர் இழந்துள்ளனர்.
தமிழகத்தில் போலீசார் நடத்திய மிக பெரிய சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போன்று கடந்த 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பரமக்குடியில் நடந்த கலவரத்தில் போலிஸ் சூப்பிரண்டு செந்தில் வேலன், துணை போலிஸ் சூப்பிரண்டு கணேசன் ஆகியோர் தாக்கப்பட்டனர்
அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் 7 ஆண்டுகள் கழித்து தற்போது தூத்துக்குடியில் மிக பெரிய துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
கடந்த ஓராண்டில் மட்டும் தமிழகத்தில் சுமார் 23 ஆயிரம் போராட்டங்கள் நடைப்பெற்று உள்ளது. அவை அனைத்தும் அறவழி போராட்டமாக இருந்தது. ஆனால் அதில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட வில்லை....அந்த அளவுக்கு கலவர பூமியாக மாறி உள்ளது தூத்துக்குடி

நேற்று நடைப்பெற்ற இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தமிழகத்தில் மட்டுமல்ல உலகம் முழுவதும் பார்வையை ஈர்த்துள்ளது.
மேலும், நேற்று நடைப்பெற்ற நெஞ்சை உலுக்கும் சம்பவத்தை தொடர்ந்து தற்போது வரை தொடர் போராட்டம், நடத்தி வருகின்றார். மக்கள் ஆங்காங்கு கூடினாலே போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து கட்டுக்குள் கொண்டு வர பாடுப்பட்டு வருகிறார்கள்.
மேலும் போலீசார் மீது போராட்டக்காரர்கள் பெட்ரோல் குண்டு வீசி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
