admk secretary caught in heroin sumggling

போதை பவுடர் கடத்திய அதிமுக வட்ட செயலாளர் நாகராஜை போலீஸ் அதிகாரிகள் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஏ. நாகராஜ் சென்னை, ஆர் கே நகர் தொகுதியின் அதிமுக 38-வது வட்ட கழக செயலாளராக உள்ளார்.

இவர் நீண்ட நாட்களாக போதை பவுடர் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

இதையடித்து வேலூர் மாவட்ட போலீசார் நாகராஜனை சுற்றி வளைத்து இன்று காலை சென்னையில் கைது செய்தனர்.

இவருடன் ஸ்டீபன் சக்ரவர்த்தி, கணேஷ், காஜிமுகமது, சதீஷ் (எ) மணி, கணேஷ் ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது இவர்கள் 6 பேரையும் வேலூர் சுங்குவாசத்திரம் காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். 

ஒரு ஆளும் கட்சியை சேர்ந்த வட்ட செயலாளர் ஒருவரே போதை பொருள் கடத்தி போலீசில் சிக்கி இருப்பது காஞ்சிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.