Adams Bridge to make a name for the voc
திண்டுக்கல்
ஆடம்ஸ் பிரிட்ஜ்-க்கு கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி-யின் பெயர் சூட்டில் வ.உ.சி பாலம் என பெயர் வைக்க வேண்டும் என்று காமராஜர் - சிவாஜி தேசிய பேரவை சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திண்டுக்கல் மாவட்ட காமராஜர் - சிவாஜி தேசிய பேரவை சார்பில், தாதாபாய் நௌரோஜியின் 193-வது பிறந்தநாள் விழா, வ.உ. சிதம்பரனாரின் 146-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சி திண்டுக்கல்லில் காமராஜர் சிலை வளாகப் பகுதியில் நடைபெற்றது. இதற்கு மாவட்டத் தலைவர் ஆ.பாண்டியன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக ப.சுப்புராம் பங்கேற்றார்.
இதில், தாதாபாய் நௌரோஜி மற்றும் வ.உ.சி ஆகிய இரு தலைவர்களின் உருவப் படங்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர், “தூத்துக்குடி கடற்கரையில் வ.உ.சிதம்பரனாருக்கு சிலை அமைக்க வேண்டும்.
ஆடம்ஸ் பிரிட்ஜ் என்பதை வ.உ.சி. பாலம் என பெயர் மாற்ற வேண்டும்.
மும்பையில் உள்ள மஜ்கான் டாக்யார்ட் என்ற கப்பல் கட்டும் தளத்துக்கு வ.உ.சி. பெயரை சூட்ட வேண்டும்” என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, மாவட்டப் பேரவை நிறுவனர் சு.வைரவேல், செயலர் பி.கே. மோதிலால் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
