ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியான நடிகை விந்தியா ஜெயலலிதாவின் சமாதியில் மாம்பழம் படையல் வைத்து விநோதமாக அஞ்சலி செலுத்தினார்.

நடிகையும் அதிமுக பேச்சாளருமான விந்தியா ஜெயலலிதாவின் தீவிர ரசிகையாகவும் விசுவாசியாகவும் திகழ்தார். விந்தியாவுக்கு ஆந்திரா மாநிலம் திருப்பதி அருகே உள்ள சந்திரகிரியில் 200 ஏக்கரில் மாம்பழ தோட்டம் உள்ளது.

இந்த மாம்பழங்களை ஜெயலலிதாவுக்கு ஆண்டுதோறும் விந்தியா அனுப்பி வைப்பது வழக்கம்.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு விந்தியா அரசியலில் இருந்து விலகி இருந்தார். அதிமுக சசிகலா அணி, ஒ.பி.எஸ் அணி என பிரிந்தபோது கூட அவர் கண்டுகொள்ள வில்லை. யாருக்கும் ஆதரவும் தெரிவிக்கவில்லை.

மே மாதம் மாம்பழ சீஷன் என்பதால் விந்தியா தோட்டத்தில் மாம்பழங்கள் அமோகமாக விளைந்தன.

இதையடுத்து இன்று மாலை 6 மணிக்கு நடிகை விந்தியா ஜெ. சமாதிக்கு சென்று தன் தோட்டத்தில் விளைந்த மாம்பழங்களை வைத்து வினோதமான முறையில் அஞ்சலி செலுத்தினார்.