டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மூலம் மக்களின் நேர விரயத்தை குறைத்தது பாஜக தான் - நீலகிரியில் நமீதா பேச்சு
கடந்த 10 ஆண்டுகளில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மூலம் மக்களின் நேர விரயத்தை கணிசமாக குறைத்தது பாஜக தான் என நீலகிரி தொகுதியில் போட்டியிடும் எல்.முருகனுக்கு ஆதரவாக பேசி நமீதா தேர்தல் பிரசாரம்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நீலகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் எல்.முருகனுக்கு ஆதரவு கேட்டு நடிகையும், பாஜக ஆதரவாளருமான நமீதா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் நடந்த வாகன பிரச்சாரத்தில் நடிகை நமீதா கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மிகப்பெரிய வளர்ச்சியை இந்தியாவிற்கு அளித்துள்ளதாக பேசினார்.
வடலூர் வள்ளலார் ஞான சபையில் சர்வதேச மையம் அமைக்க கடும் எதிர்ப்பு; தீடீ போராட்டத்தால் தொடர் பதற்றம்
குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் குகூள் பே, பே.டி.எம் போன்ற டிஜிட்டல் பணபரிவர்த்தனை மூலம் வங்கிகளில் காத்திருக்கும் நிலையை எளிமையாக்கி பொதுமக்களுக்கு கால நேர விரயத்தையும், சிரமங்களையும் குறைத்துள்ளதாக பேசினார். அத்துடன் செல்போன் பயன்பாட்டினை பொறுத்தவரை உலகத்தில் எங்கும் இல்லாத வகையில் செல்போன் டேட்டா உபயோகத்தில் கட்டணம் இந்தியாவில் மட்டுமே குறைந்த அளவில் உள்ளதாகவும் வெளிநாட்டில் ஒரு ஜீ.பி டேட்டா 300 ரூபாயாக உள்ள நிலையில் இந்தியாவில் 10 ரூபாய் மட்டுமே என சுட்டிக்காட்டினார்.
பலமுறை கேப்டனுடன் வந்த நான் முதல் முறையாக தனியாக வந்துள்ளேன்; பண்ருட்டியில் கண் கலங்கிய பிரேமலதா
மேலும் ஏற்கனவே நீலகிரி தொகுதி எம்.பியாக உள்ள ஆ.ராசாவை தனக்கு பெயர் சொல்ல கூட விருப்பம் இல்லை. நம்பி வாக்களித்த மக்களை அவர் அவமானபடுத்துகிறார். மக்களின் நம்பிக்கையான கடவுள் வழிபாட்டினை கொச்சைப்படுத்தி அவமானபடுத்துகிறார். எனவே வரும் தேர்தலில் தாமரைக்கு வாக்களிக்க வேண்டும். அப்போது தான் தமிழகம் வளரும் என பேசினார்.