Rajini : ஆம்ஸ்ட்ராங் கொலையாளி என்கவுன்டர்.! ஒற்றை ரியாக்ஷனில் சட்டம் ஒழுங்கிற்கு பதில் அளித்த ரஜினிகாந்த்
ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளி திருவேங்கடம் என்கவுன்டர் செய்யப்பட்டது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த என்கவுன்டர் தொடர்பான கேள்விக்கு ஒற்றை வரியில் பதில் அளித்தார்.
என்கவுன்டர்- எதிர்ப்பு, ஆதரவு
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் கடந்த வாரம் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், 11 பேரை போலீசார் கைது செய்தனர். ரவுடிஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்கு பழி வாக்கவே ஆம்ஸ்ட்ராங்கை திட்டமிட்டு கொலை செய்ததாக தெரிவித்திருந்தனர். இந்தநிலையில் இந்த கொலையில் முக்கிய பங்கு வகித்த ரவுடி திருவேங்கடத்தை போலீசார் என்கவுன்டரில் சுட்டு கொன்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஒரு பக்கம் ஆதரவான கருத்துகளும் மறுபக்கம் எதிர்ப்பும் எழுந்துள்ளது. முக்கிய குற்றவாளிகளை தப்பவைக்க என்கவுன்டர் நடத்தப்பட்டதாக விமர்சிக்கப்பட்டது.
அம்பானி வீட்டு திருமணத்தில் ரஜினி
இந்தநிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிரபல தொழிலதிபர் அம்பானி வீட்டு திருமண நிகழ்வில் கலந்து கொண்டார். திருமணம் நிகழ்வு முடிவடைந்ததையடுத்து விமானம் மூலம் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். அப்போது செய்தியாளர்கள் கேள்விக்கு ரஜினி பதில் அளித்தார். அம்பானி வீட்டு கடைசி திருமணம், கலந்து கொண்டது மகிழ்ச்சி. பெரிய அளவில் திருமணத்தை நடத்தியிருக்காங்க என தெரிவித்தார். இதனை தொடர்ந்து கமல்ஹாசனின் இந்தியன் 2 படம் வெளியாகியுள்ளது. தொடர்பான கேள்விக்கு இன்னும் படம் பார்க்கவில்லை. நாளை பார்க்க போகிறேன் என தெரிவித்தார்.
என்கவுன்டர்- ரஜினி ரியாக்ஷன் என்ன.?
ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகள் என்கவுன்டர் செய்யப்பட்டுள்ளனர். என்கவுன்டர் மட்டுமே சட்டம் ஒழுங்கிற்கு தீர்வாகுமா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் நடிகர் ரஜினிகாந்த நோ கமெண்ட்ஸ் என பதிலளித்துவிட்டு சென்றார். அப்போது ரஜினி ரசிகர் ஒருவர் ஆம்பானி வீட்டில் நீங்கள் ஆடிய டான்ஸ் சூப்பாரக இருந்தது தலைவா என குரல் எழுப்பினார். அதற்கு நன்றி என ரஜினிகாந்த் தெரிவித்தார்.