நீ சினிமாவில் வில்லனாக இருக்கலாம் நாங்கள் நிஜத்தில் வில்லன்; நடிகர் பாபி சிம்ஹாவிற்கு கொலை மிரட்டல்
கொடைக்கானலில் நடிகர் பாபி சிம்ஹா வீடு கட்டி வரும் நிலையில், கட்டுமான ஒப்பந்ததாரருக்கும், பாபி சிம்ஹாவிற்கும் இடையே ஏற்பட்ட மோதலில் நடிகர் பாபி சிம்ஹாவிற்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக அவரது வழக்கறிஞர் குற்றம் சாட்டி உள்ளார்.
நடிகர் பாபி சிம்ஹா கொடைக்கானலில் கட்டி வரக்கூடிய வீட்டின் கட்டுமான ஒப்பந்ததாரர்களுக்கு கொலை மிரட்டல் கொடுத்ததாக கொடைக்கானல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்படுள்ள நிலையில் பாபி சிம்ஹா வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்,
அப்போது பேசிய அவர், கொடைக்கானலில் நடிகர் பாபி சிம்ஹா வீடு கட்டிவரும் நிலையில் கட்டிட ஒப்பந்த தாரர்கள் தரமற்ற முறையில் வீட்டை கட்டி இருக்கிறார்கள். அரசியல் குடும்ப பின்புலம் கொண்ட நபரான உசேன் மூலம் அறிமுகமான கட்டிட ஒப்பந்ததாரர் ஜமீரிடம் நடிகர் பாபி சிம்ஹா 1 கோடியே 30 லட்சம் ரூபாயில் வீடு கட்டித்தர ஒப்பந்தமிட்ட நிலையில் உசேன் மற்றும் ஜமீர் பணத்தை பெற்றுக் கொண்டு வீட்டை முழுமையாக முடிக்காத நிலையில் கூடுதலாக 40 லட்சம் தரகோரி அழுத்தம் கொடுத்துள்ளனர்.
கல்லூரி கலை நிகழ்ச்சியில் மோதல்; சக மாணவர்கள் தாக்கியதில் ஒருவர் படுகாயம்
இதுகுறித்து கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் அரசியல் பின்புலம் காரணமாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தியதைத் தொடர்ந்து நீதிமன்றம் சென்று வழக்கு பதிவு செய்தோம்.
இதனால் கட்டுமான ஒப்பந்ததார்களை நடிகர் பாபி சிம்ஹா மிரட்டியதாக உசேன் மற்றும் ஜமீர் அளித்த பொய் புகாரை காவல் துறையினர் ஏற்று கொண்டு வழக்கு பதிவு செய்துள்ளனர். நாங்கள் புகார் கொடுக்கும் போது காலம் தாழ்த்திய காவல்துறை நீதிமன்றம் சென்று வழக்குதொடுத்த நிலையில் 10 நாட்கள் கழித்து அச்சத்தில் அவர்கள் கொடுத்த புகாரை உடனடியாக ஏற்றுக்கொண்டது என்றார்.
ஷாக்கிங் நியூஸ்.. 2 குழந்தைகளுடன் பெண் காவலர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை.. இதுதான் காரணமா?
அதனை தொடர்ந்து 58 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான தரமற்ற வீட்டின் கட்டுமானம் இருப்பதாவும், சுமார் 1 கோடியே 11 லட்சத்து 50 ரூபாய் மோசடி செய்து ஏமாற்றி உள்ளதாகவும் குற்றம் சாட்டிய நடிகர் பாபி சிம்ஹா வழக்கறிஞர் மோசடி செய்த பணத்தை திரும்பத் தர வேண்டும் என தெரிவித்துக் கொண்டார்.
மேலும் நீ சினிமாவில் வில்லனாக இருக்கலாம். ஆனால் நாங்கள் நிஜ வில்லன்கள் என நடிகர் பாபி சிம்ஹாவிற்க்கு குறுஞ்செய்தி அனுப்பி உசேன் மிரட்டியதாகவும், முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் ஆருண் மற்றும் வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் அசன் மௌலான ஆகியோரின் அரசியல் பின் புலத்தில் இதுபோன்ற மோசடிகள் நடைபெறுவதாக குற்றம் சட்டினார்.