டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பதை தடுக்கும் வகையில், அரசு புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதன்படி, ரொக்கம், கார்டு மற்றும் யுபிஐ மூலம் MRP விலையில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும், மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 

தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் 4,829 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இதனை அரசு எடுத்து நடத்தி வருகிறது. இந்நிலையில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பதை தடுக்கும் வகையில் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும், டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதாவது

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின், மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில், மதுபானங்கள் விற்பனை (Cash), PoS (Card மூலம்) மற்றும் யுபிஐ (UPI) மூலம் நடைபெறும் நிலையில் (Cashless transaction), அதிகபட்ச சில்லறை விற்பனை விலை (MRP) விதிமீறல்களை தடுக்கும் பொருட்டு பின்வரும் நடைமுறைகளை செயல்படுத்தி கடைப்பிடிக்க அறிவுறுத்தப்படுகிறது.

* மதுபானக் கடைகளில் மதுபானங்கள் விற்பனை ரொக்கம், கார்டு மற்றும் யுபிஐ ஆகியவை மூலம் நடைபெறும் நிகழ்வுகளில் மதுபானங்களின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையில் (MRP) மட்டுமே அவைகளை விற்பனை செய்து இருக்க வேண்டும். இந்த நடைமுறையில் வேறுபாடு நிகழக் கூடாது.

* ரொக்கம், கார்டு மற்றும் யுபிஐ மூலம் மதுபானங்களின் 2/4 விற்பனை விலையை விட கூடுதலாக விற்பனை தொகை பெறப்பட்டி பெறப்பட்ட முழு தொகையினையும் அப்படியே டாஸ்மாக் கணக்கில் செலுத்த வேண்டும். PoS மற்றும் UPI மூலம் (MRP) அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட கூடுதலாக ஏதேனும் தொகை பெறப்பட்டிருப்பின் அவ்வாறு கூடுதலாக பெறப்பட்ட தொகையை Cash-ற்கு மதுபானம் விற்றத் தொகையிலிருந்து கழித்து மீதி தொகையை வங்கியில் செலுத்தக்கூடாது. மாறாக பணத்துக்கு மதுபானம் விற்ற தொகை ஒவ்வொரு மதுபான புட்டிகளுக்கும் அவைகளின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையில் (MRP) அந்த நாளில் விற்பனை மேற்கொண்ட புட்டிகளின் முழுமையான கூட்டுத் தொகையாக இருக்க வேண்டும்.

* மதுபானங்கள் விற்பனையில் அதிகபட்ச விற்பனை விலையில் ஒரு பகுதி பணமாகவும் ஒரு பகுதி கார்டு மற்றும் யுபிஐ மூலம் பெறப்பட்டால் அந்தந்த கடைகளில் தனிபதிவேடுகளில் இந்த விவரங்களை பதிவு செய்து தனியாக பராமரிக்க வேண்டும்.

* சிட்டாவில் மதுபானங்கள் விற்பனையை பதிவு செய்யும் போது ரொக்கம், கார்டு மற்றும் யுபிஐ

UPI மூலம் நடைபெறும் பரிவர்த்தனை இனங்களை, தனியாக பதிவு செய்ய வேண்டும்.

* மதுபானங்கள் விற்பனைக்கு ரொக்கம், கார்டு மற்றும் யுபிஐ மூலம் பரிவர்த்தனை நடைபெற வேண்டும். தனி நபர்களிடமிருந்து மொத்தமாக பணம் பெற்று அதனை பரிவர்த்தனையாக மேற்கொள்ளக் கூடாது.

* அனைத்து கடைகளிலும் Digital Transaction பணப்பரிவர்த்தனை பயன்பாட்டை அதிகரிக்க மாவட்ட மேலாளர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

* புதிய மதுபானக் கடைகள் திறக்கும் பொழுது மாவட்ட மேலாளர்கள் தலைமை அலுவலகத்தை தொடர்பு கொண்டு புதிதாக திறக்கப்படும் கடையில் அதனை திறக்கும் நாளிலே கார்டு மற்றும் UPI பயன்பாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* ரொக்கம் மற்றும் கார்டு, UPI -யை பயன்படுத்தும் போது கணினி மயமாக்குதலுக்காக வழங்கப்பட்ட கையடக்க கருவியில் மதுபானங்களை ஸ்கேன் செய்து கார்டு என்ற Option ஐ தேர்வு செய்த பின் கார்டு மற்றும் UPIஐ பயன்படுத்த வேண்டும்.

* மதுபானக் கடைகளில் தினந்தோறும் கணினி மயமாக்குதலுக்காக வழங்கப்பட்ட கையடக்க கருவியில் உள்ள ரொக்க விற்பனை மற்றும் கார்டு மூலம் நடைபெற்ற விற்பனையை கடை பணியாளர்கள் வங்கியில் செலுத்திய பணம் மற்றும் கார்டு மூலம் நடைபெற்ற விற்பனை விவரங்களையும் ஒப்பீடு செய்து வேறுபாடு உள்ளதா கண்காணிக்க வேண்டும். மேலும் மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் இந்த பணியினை ஒரு இளநிலை உதவியாளருக்கு பணி ஒதுக்கீடு செய்து தினந்தோறும் மாவட்ட மேலாளர் கண்காணிக்க வேண்டும். அதாவது இதற்கான தனியாக கோப்பு தயார் செய்து மாவட்ட மேலாளருக்கு தினமும் சமர்ப்பிக்க பணிக்க வேண்டும்.

* Pos Machine வாயிலாக விற்பனை செய்த தொகை முழுவதும் சரியாக அதற்குரிய வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதா என தினசரி சரிபார்த்து உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

* ரொக்கத்தில் (Cash-ற்கு) விற்பனைச் செய்த தொகை முழுவதும் அந்தந்த மதுபானத்திற்கு உரிய அதிகபட்ச சில்லறை விற்பனைத் தொகையில் (MRP) அதாவது அவை முழுவதற்கும் உரிய அதிகபட்ச சில்லறை விற்பனைத் தொகையின் கூட்டுத் தொகையில் எந்த குறைபாடும் இன்றி அடுத்த நாள் வங்கியில் செலுத்தப்பட்டதா என சரிபார்த்து தினசரி உறுதி செய்ய வேண்டும்.

இதில் குறைபாடு ஏதேனும் இருப்பின் அதனை, விற்பனை தொகை ஒழுங்கு கையாடல் செய்துள்ளதாக முடிவு செய்து அது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அதாவது:

a) குறைவுத் தொகையை முழுவதுமாக வசூல் செய்தல்.

b) குறைவுத் தொகை மீது 50% அபராதத் தொகை வசூல் செய்தல்.

c) குறைவுத் தொகை மீது 2% மாதவட்டி வசூல் செய்தல்.

d) அபராத தொகை மற்றும் வட்டித் தொகை மீது GST வசூல் செய்தல்.

மேற்கண்ட அனைத்து நடவடிக்கைகளும் விடுதலின்றி செய்ய வேண்டும்.

* மேலும் இது தொடர்பாக இச்சுற்றறிக்கையோடு இணைக்கப்பட்ட படிவத்தில் மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் ஒவ்வொரு நாளும் அந்த மாவட்டத்தில் அமைந்துள்ள மதுபான கடைகளின் அனைத்து மதுபான விற்பனைகளின் விற்பனை விவரங்கள். மின்மயமாக பெற்ற விற்பனைத்தொகை, பணமாக பெற்ற விற்பனைத்தொகை ஆகிய விவரங்கள் முழுமையாக தொகுத்து கண்காணிக்கப்பட வேண்டும். ஏதேனும் ஒரு கடையில் மாறுபாடுகள் இருப்பின் அந்த கடையினை அன்றைய தினமே முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்

* மேலும் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலக நிலையில் இப்பணியினை ஒரு இளநிலை உதவியாளருக்கு ஒதுக்கப்பட்டு அந்த மண்டலத்தின் கீழ் வரும் அனைத்து மாவட்டங்களில் அமைந்துள்ள மதுபான சில்லறை விற்பனை கடைகளை ஒவ்வொரு நாளும் விடுதலின்றி கண்காணிக்க வேண்டும். இந்த பணியினை மேற்கொள்ளும் இளநிலை உதவியாளர் இவ்வாறு தொகுக்கப்பட்ட மாவட்ட வாரியான விவரங்களை முதுநிலை மண்டல மேலாளரின் நேர்முக உதவியாளர் வாயிலாக முதுநிலை மண்டல மேலாளருக்கு தனியாக கோப்பில் சமர்ப்பிக்க வேண்டும். முதுநிலை மண்டல மேலாளரும் ஒவ்வொரு நாளும் இந்த அலுவலக நடை முறையை தோய்வு ஏதுமின்றி ஒவ்வொரு நாளும் தொடர்ந்து நடைபெறுகிறதா என்று கண்காணிக்க வேண்டும்.

* மேற்கண்ட இனங்கள் 1 முதல் 11 தொடர்பாக பிரதி மாதம் 7-ம் தேதிக்குள் தலைமை அலுவலகத்திற்கு மாவட்ட மேலாளர்கள் மற்றும் முதுநிலை மண்டல மேலாளர்கள் கண்டிப்பாக அறிக்கை அனுப்பி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

* மேற்கண்ட இனங்கள் 12 மற்றும் 13 தொடர்பாக ஒவ்வொரு நாளும் இணைக்கப்பட்டுள்ள படிவம் 1-ல் மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் தயார் செய்யப்பட்டு முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். படிவம் 2-ல் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில் தயார் செய்யப்பட்டு ஒவ்வொரு நாளும் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.