accused surrendered in advocate case

சென்னை கலங்கரை விளக்கம் ரயில் நிலையம் அருகே வழக்கறிஞர் கேசவன் என்பவரை மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டிய விவகாரத்தில் முக்கிய குற்றவாளி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

சென்னை கலங்கரை விளக்கம் ரயில் நிலையம் கடந்த 19ஆம் தேதி காலை மர்ம ஆசாமிகள் வழக்கறிஞர் கேசவனை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

இதில் படுகாயமடைந்த வழக்கறிஞர் கேசவன் படு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். 

இந்த தாக்குதல் சம்பந்தமாக 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வந்தனர்.

வழக்கு சம்பந்தமாக ஏற்பட்ட முன் விரோதத்தால் தாக்குதல் நடந்திருக்கலாம் என்ற ரீதியில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் தாக்குதல் சம்பந்தமாக முக்கிய குற்றவாளியான வினோத் (எ) ஆர்க் வினோத் உத்திரமேரூர் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார்.

இந்த தாக்குதல் சமபவத்தில் ஈடுபட்ட மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.