சுட்டெரிக்க தொடங்கிய கத்திரி வெயில்.! அடுத்த 5 நாட்களுக்கு பொதுமக்களே உஷார்.? எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்
கத்தரி வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நேற்று ஒரே நாளில் 14 மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் மேல் வெப்பநிலை பதிவானது. வரும் நாட்களில் மேலும் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்க கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதிகரித்த கோடை வெயில்
தமிழகத்தில் கோடை காலம் மார்ச் மார்ச் இறுதியில் தொடங்கி ஜூன் இறுதிவரை நீடிக்கும் இந்த காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் பல்வேறு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் மத்திய அரசு வழங்கியது. குறிப்பாக அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டும் முற்பகல் 12 மணி முதல் மாலை 3மணி வரை வெளியே செல்ல வேண்டும் என தெரிவித்திருந்தது. இல்லையென்றால் வீட்டில் இருக்கும் படி அறிவுறுத்தியது. மேலும் அதிகளவு தண்ணீர் சத்து உள்ள பழங்களை சாப்பிடவும் கூறியது. இந்தநிலையில் கடந்த சில வாரங்களாக வெப்ப சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது இதன் காரணமாக இது கோடை காலமா.? அல்லது மழை காலமா என்ற கேள்வி எழுந்தது.
14 மாவட்டங்களில் சதம் அடித்த வெயில்
இந்தநிலையில் தற்போது மழையானது நின்ற நிலையில் மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கிவிட்டது. தமிழ் நாட்காட்டியில் குறிப்பிடப்படும் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் மே 4ஆம் தேதி தொடங்கியது. சூரியன் தனது உச்சபட்ச வெப்பத்தை தமிழ்நாட்டில் மேல் கொட்டும் இக்காலம் மே 29 ஆம் தேதி வரை நீடிக்கிறது. அதன்படி இந்த ஆண்டு கத்திரி வெயில் காலத்தில் வெயிலின் அளவு 100 டிகிரி பாரன்ஹீட் முதல் 117 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கும் என தெரிகிறது. அந்த வகையில் நேற்று தமிழகத்தில் உள்ள 14 மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரியை தாண்டியுள்ளது.
5 நாட்களுக்கு அலெட்ர் கொடுத்த வானிலை மையம்
அதிகபட்சமாக வேலூரில் 107, சென்னையில் 105 , கரூர் 105, ஈரோடு மற்றும் மதுரையில் 103 டிகிரியாக வெப்பநிலை பதிவானது. திருச்சி, திருத்தனி, தஞ்சாவூரில் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் 100 டிகிரியை வெப்பநிலை தாண்டியது. இந்தநிலையில் அடுத்து வரும் 5 நாட்கள் வெயிலின் தாக்கம் அதிகரிக்க கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மே 15ம் தேதி முதல் மே 18ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் உயரக்கூடும் என தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்
கோடையில் உங்களை நீரேற்றமாக வைக்க வேண்டுமா? அப்போ இதை சாப்பிடுங்க..!!