ஆவினில் இனி தண்ணீர் பாட்டில் தயாரிப்பு.. பால் பாக்கேட்டுகளில் சினிமா விளம்பரங்கள்.. அமைச்சர் சொன்ன தகவல்
ஆவின் நிறுவனம் மூலம் குடிநீர் பாட்டில் தயாரிக்க திட்டமிடப்படுள்ளதாக அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். ஆவின் பால் தயாரிக்கும் 28 யூனிட்களிலும் வாட்டர் பிளாண்ட் உள்ளதால், விரைவில் குடிநீர் பாட்டில் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பால் பாக்கெட்டுகளில் சினிமா விளம்பரங்களை வெளியிடுவது குறித்தும் பரிசீலனை செய்யப்படும் என்றும் அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நாசர், குடிநீர் பாட்டில் தயாரிக்க ஆவின் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், ஆவின் பாக்கெட்டுகளில் சினிமா விளம்பரங்களை அனுமதிப்பது தொடர்பாக பரிசீலிக்கப்படும் என்று கூறினார். தமிழகத்தில் ஆவின் மூலம் பால் மற்றும் பால் பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், குடிநீர் பாட்டில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும் படிக்க:தேர்வுகளே அலர்ட்!! குரூப் 4 தேர்வு ஆன்சர் கீ வெளியீடு.. ஆட்சபனைகளை தெரிவிப்பது எப்படி..? முழு விவரம்..
தமிழகத்தில் ஆவின் பால் தயாரிக்கும் 28 யூனிட்களிலும் தண்ணீர் பிளான்ட் (R.O Plant) உள்ளதாகவும் இங்கிருந்து குடிநீர் பாட்டில் தயாரிக்க ஆவின் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தற்போது ஆவின் நிறுவனம் மூலம் தயாரிக்கவிருக்கும் தண்ணீர் பாட்டில், லேபிள் போன்ற வடிவமைப்புகளை இறுதி செய்யும் பணி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. முதல் கட்டமாக ஒரு லிட்டர் மற்றும் அரை லிட்டர் தண்ணீர் பாட்டில்களை தயாரிக்க தொடர் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க:ரெட் அலர்ட்!! இன்று 3 மாவட்டங்களில் அதி கனமழை.. 10 மாவட்டங்களில் கனமழை.. வானிலை அப்டேட்
அதேபோல், ஆவின் பாக்கேட்டுகளில் அரசு விளம்பரங்கள் மற்றும் சிறப்பு நாட்கள் தொடர்பான புகைப்படம், விளம்பரங்கள் வெளியிடப்படுகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டியை குறிப்பிடும் வகையில் செஸ் தம்பி புகைப்படம் ஆவின் பாக்கேட்டுகளில் இடம்பெற்றது. இந்நிலையில் சினிமா படங்களின் விளம்பரங்களையும் வெளியிடுமாறு திரைத் துறையினர் கேட்டு வருவதாகவும், திரைப்படங்களின் விளம்பரங்களை வெளியிடுவது குறித்து பரிசீலனை செய்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.