தமிழகத்தில் ஆதார் பதிவு பாதிப்பு: பொதுமக்கள் சிரமம்!
தமிழகத்தின் சில பகுதிகளில் ஆதார் பதிவு பாதிக்கப்பட்டுள்ளதால் பொது மக்களை சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்
நாடு முழுவதும் பல்வேறு சேவைகள், சலுகைகளை பெற ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால், பலரும் தங்களது விவரங்களை கொடுத்து ஆதார் எண்களை பதிவு செய்து வருகின்றனர். ஆதார், பான் கார்டு இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு எண்களை இணைத்த பலருக்கும் மீண்டும் இணைக்க வேண்டும் என்ற குறுஞ்செய்தி சென்றுள்ளது. இதனால், ரூ.1000 அபராதம் செலுத்தி அவர்கள் ஆதார் - பான் எண்ணை இணைத்து வருகின்றனர்.
பொதுமக்கள் கொடுக்கும் தகவல்களை அதிகாரிகள் சரியாக பதிவேற்றாத காரணத்தால் பெயர் பிழைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இதுபோன்று இணைப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, வேறு வழியில்லாமல் ஆதார் கார்டிலோ அல்லது பான் கார்டிலோ விவரங்களை திருத்தி வருகின்றனர்.
நிர்மலா சீதாராமன் மகளுக்கு திருமணம்!
இந்த சூழலில் தமிழகத்தின் சில பகுதிகளில் ஆதார் பதிவு பாதிக்கப்பட்டுள்ளது. சர்வரில் ஏற்பட்ட கோளாறால் கடந்த ஒரு வாரமாக சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் சில பகுதிகளில் ஆதார் பதிவு பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை அனகாபுத்தூரில் வசிக்கும் சீதாராமன் என்பவர் தனது குழந்தையை பள்ளியில் எல்.கே.ஜி சேர்க்கும் பொருட்டு அக்குழந்தைக்கு ஆதார் எண்ணை பெற முயற்சித்து வருகிறார். ஆனால், அவர் வசிக்கும் இடத்துக்கு அருகில் உள்ள ஆதார் மையம் பெரும்பாலும் மூடப்பட்டுள்ளது. திறந்திருக்கும் சமயத்தில், இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் சர்வர்கள் செயலிழந்து விட்டதாக கூறி அவரை அனுப்பி விடுவதாக குற்றம் சாட்டுகிறார். “கடந்த இரண்டு வாரங்களில் நான் 4 முறை இங்கு வந்து விட்டேன். UIDAI சர்வர் கோளாறு என்று கூறி இரண்டு எஆட்கள் கழித்து வருமாறு கேட்டுக் கொண்டார்கள். மறுபடியும் சென்றபோது மீண்டும் சர்வர் கோளாறு என்கிறார்கள்.” என சீதாராமன் கூறுகிறார்.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி (TACTV) மற்றும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை (TNeGA) மையங்கள் மூலம் ஆதார் பதிவுகள், திருத்தங்கள் மற்றும் புதுப்பிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. சென்னையில் மட்டும் வங்கிகள், தபால் நிலையங்கள் மற்றும் TNeGA மையங்கள் என சுமார் சுமார் 334 பதிவு மையங்கள் உள்ளன, ஆனால் மிகக் குறைவானவை மட்டுமேசுமார் 334 பதிவு மையங்கள் உள்ளன, ஆனால் மிகக் குறைவற்றில் மட்டுமே புதிய ஆதார் பதிவுகளை மேற்கொள்ள முடிகிறது. “UIDAI சர்வர்களுடன் இணைப்பது கடினமாக உள்ளது. நாள் ஒன்றுக்கு 2-3 விண்ணப்பங்களை கூட எங்களால் செயல்படுத்த முடியவில்லை.” என்கிறார் முகவர் ஒருவர்.
தபால் நிலையங்களிலும், நெட்வொர்க் பிரச்னைகள் இருப்பதாக ஊழியர்கள் புகார் கூறுகின்றனர். “வழக்கமான வேலையைத் தவிர எங்களுக்கு இது கூடுதல் பொறுப்பு. ஆதார் பதிவில் சாதாரண வேலையை முடிக்கவே ஒரு மணி நேரம் ஆகிறது.” என்று பெயர் வெளியிட விரும்பாத தபால் நிலைய ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மார்ச் 15ஆம் தேதி முதல் ஆன்லைனில் விவரங்களைப் புதுப்பித்துக்கொள்ளலாம் என்று UIDAI அறிவித்தது. ஆனால், ஆன்லைனில் அதுபோன்று செய்ய முடியவில்லை. ஆன்லைன் செயல்முறை கடினமாக உள்ளது. எனவே ஆதார் பதிவு மையத்துக்கு நேரடியாக சென்றேன். இங்கோ சேவை மிகவும் மோசமாக உள்ளது.” என்கிறார் மூத்த குடிமகள் கிருஷ்ணகுமாரி.
இதுகுறித்து, மாநில தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் TNeGA மற்றும் TACTV அதிகாரிகள் கூறுகையில், பெங்களூரில் உள்ள UIDAI பிராந்திய அலுவலகத்தைத்தான் தாங்கள் தொடர்பு கொள்ள வேண்டும். சர்வர் உள்ளிட்ட விஷயங்களை அவர்களால்தான் அணுக முடியும் என்கிறார்கள். ஆனால், UIDAI அதிகாரிகள் இதுகுறித்து கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.