காளி என்ற ஆவணப்படம் தொடர்பாக சமீபத்தில் இயக்குநர் மற்றும் எழுத்தாளருமான லீனா மணிமேகலை ஒரு போஸ்டரை வெளியிட்டிருந்தார்.

இது சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்து மதத்தை இழிவு செய்யும் வகையில் இந்த போஸ்டர் இருப்பதாக புகார்கள் எழுந்தன. இந்து அடிப்படைவாதிகள், இவருக்கு எதிராக #arrest Leena Manimekala என்ற ஹேஷ் டேக்கை டிரெண்டு செய்தனர். இந்நிலையில் டெல்லி காவல்துறையினர் 153 A மற்றும் 295 A என்ற இருபிரிவுகளுக்கும் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்தது. 

மேலும் செய்திகளுக்கு.. "லேடி வழியில் போக சொன்னா.. மோடி வழியில் போறாங்க" அதிமுகவை டாராக கிழித்த கி.வீரமணி

லீனா மணிமேகலையின் போஸ்டர் இந்து மதத்தை புண்படுத்துவதாகவும், இருதரப்பிற்கும் இடையில் மோதல்களை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போஸ்டரை வெளியிட்ட லீனா மணிமேகலையை கைது செய்ய வேண்டும் என போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகிறது. 

கோவை சொக்கம்புதூரை சேர்ந்தவர் சரஸ்வதி. சக்தி சேனா இந்து மக்கள் இயக்க தலைவராக உள்ளார். இவர் கடவுள் படத்தை சர்ச்சைக்குரிய முறையில் வெளியிட்ட லீனா மணிமேகலைக்கு கண்டனம் தெரிவித்து வீடியோ வெளியிட்டார். அதில் லீனா மணிமேகலையை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டலும் விடுத்து இருந்தார். இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலானது. 

மேலும் செய்திகளுக்கு.. இடைக்கால பொதுச்செயலாளர் கனவில் எடப்பாடி.. மண்ணை அள்ளிப்போட்ட கேசிபி.. அச்சச்சோ !

இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் செல்வ குமார் செல்வபுரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இயக்குனர் லீனா மணிமேகலை குறித்து தகாத வார்த்தைகள் பேசி, கொலை மிரட்டல் விடுத்த சரஸ்வதி மீது செல்வபுரம் போலீசார் தகாத வார்த்தைகள் பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து இன்று சரஸ்வதியை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகளுக்கு.. "தமிழகத்தில் இருந்து ஷிண்டே புறப்படுவார் !" அண்ணாமலை கிளப்பிய புது சர்ச்சை