Asianet News TamilAsianet News Tamil

நாகர்கோவிலில் இருந்து காசிக்கு நாளை முதல் தனியார் ரயில் சேவை; பொதுமக்கள் ஆர்வமுடன் எதிர்பார்ப்பு

நாகர்கோவிலில் இருந்து காசிக்கு தனியார் ரயில்சேவை நாளை காலை துவங்கவுள்ள நிலையில், இதற்காக ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

a private train service from nagercoil to kashi will start its journey tomorrow
Author
First Published Jun 6, 2023, 11:52 AM IST

ரயில்வேயில் நவீன தொழில்நுட்பங்களை அறிமுகபடுத்தவும், பயணிகளுக்கு சர்வதேச தரத்திலான சேவையை வழங்குவதற்கும் முக்கியமான வழி தடங்களை ரயில்வே நிர்வாகம் தனியாருக்கு ஒப்படைத்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து ஆன்மீக தலமான காசிக்கு நாளை காலை 8 மணிக்கு முதல் சேவையை தொடங்குகிறது. சென்னையை சேர்ந்த எஸ்ஆர்எம் நிறுவனம் இந்த ரயிலை வாடகை அடிப்படையில் எடுத்துள்ளது.

நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம், எர்ணாகுளம், பாலக்காடு, பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, எக்மோர், விஜயவாடா, விசாகப்பட்டினம் வழியாக காசி சென்றடைகிறது. மொத்தம் 10 நாட்கள் பயணத்தில் மூன்று நேரமும் சைவ உணவு வழங்கப்படுகிறது. மொத்தம் 11 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. 

கடலூரில் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி உயிரிழப்பு; உறவினர்கள் மறியலால் பதற்றம்

இந்த ரயிலில் சாதாரண பெட்டிகள் 3, 2 அடுக்கு படுக்கை வசதி கொண்ட ஏசி பெட்டி 2, 3 அடுக்கு படுக்கை வசதி கொண்ட 6 ஏசி பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 800 பேர் ஒரே நேரத்தில் பயணம் செய்யும் வசதி கொண்ட இந்த ரயிலில் படுக்கை வசதி கொண்ட இரண்டாம் வகுப்பு பெட்டியில் பயணம் செய்ய நபர் ஒருவருக்கு 21 ஆயிரம் ரூபாயும், த்ரீ டயர் ஏசி பெட்டியில் பயணம் செய்ய நபர் ஒருவருக்கு 31 ஆயிரத்து 600 ரூபாயும், டபுள் டயர் ஏசி பெட்டியில் பயணம் செய்ய நபர் ஒருவருக்கு 35 ஆயிரத்து 950 ரூபாயும் கட்டணம் நிர்ணயம் செய்யபட்டுள்ளது.

திண்டுக்கல்லில் பட்டப்பகலில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த முதியவர் படுகொலை - காவல்துறை விசாரணை

மேலும் பஸ்கட்டணம், தங்கும் அறைகள் மற்றும் சைவ உணவு வழங்கப்படுகிறது. இந்த ரயிலில் ஒவ்வொரு பெட்டியிலும் தனியார் செக்கியூரிட்டி ஊழியர் மற்றும் ஹவுஸ்கீப்பிங் உதவியாளர் இருப்பார்கள் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios