காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானுக்கு சொந்தமானதா.? திமுக வெளியிட்ட இந்திய வரைபடத்தால் ஏற்பட்ட சர்ச்சை என்ன.?
திமுக வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவின் X பதிவில், ஜம்மு-காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானுக்குச் சொந்தமானது போல இந்திய வரைபடம் சித்தரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவின் X பதிவில், ஜம்மு-காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானுக்குச் சொந்தமானது போல இந்திய வரைபடம் சித்தரிக்கப்பட்டதால் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, தமிழக ஆளும் கட்சியான திமுக இந்தப் பதிவை நீக்கியதாகக் கூறப்படுகிறது. சில மணி நேரங்களுக்குப் பிறகு, "திராவிட மாடல் ஆட்சியில் கல்வியைப் போல் பொருளாதாரத்திலும் வளர்ந்து வரும் தமிழ்நாடு!" என்ற தலைப்பில் சரியான இந்திய வரைபடத்துடன் புதிய பதிவு மீண்டும் வெளியிடப்பட்டது.
தமிழக பாஜக மாநில செயலாளர் டாக்டர் எஸ்.ஜி. சூர்யா, எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் திமுகவைக் கடுமையாக விமர்சித்துள்ளார். 2020 ஆம் ஆண்டில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் இதேபோன்ற சம்பவத்தில் இந்திய வரைபடத்தைத் தவறாகச் சித்தரித்ததைக் குறிப்பிட்டுள்ளார், எனவே திமுக முதல் முறையாக இந்திய வரைபடத்தைத் தவறாகப் பயன்படுத்துவதில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.
முன்னதாக 2020 ஆம் ஆண்டில் உதயநிதிஸ்டாலின் ஒரு வீடியோவில் இதே தவறைச் செய்தார். இது தொடர்பாக அப்போதைய காவல் ஆணையரிடம் புகார் அளித்த பிறகு, இந்திய வரைபடம் தவறாகச் சித்தரிக்கப்பட்ட வீடியோவை அவர் நீக்கியதாக தெரிவித்துள்ளார்..திமுகவும் திமுக ஆதரவாளர்களும் பாகிஸ்தானை விரும்புவதில் ஆச்சரியமில்லை என்று பாஜக நிர்வாகி சூர்யா தெரிவித்துள்ளார்,. .
இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டைச் சிதைக்க திமுக முயற்சிப்பதாகப் பல பாஜக நிர்வாகி சூர்யாவின் பதிவிற்கு கமெண்ட் செய்து வருகின்றனர். அதில் ஒருவர் "சனாதனத்தை ஒழிப்பது முதல் கனவு, இரண்டாவது கனவு இந்தியாவை ஒழிப்பதா? திமுக ஏற்கனவே ஜம்மு-காஷ்மீரின் பாதியை பாகிஸ்தானுக்குக் கொடுத்துவிட்டதா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மற்றொரு கமெண்டில் , "திமுக வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவின் நிர்வாகி பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்று நான் உறுதியாக நம்புகிறேன். வேறு யாராவது ஏன் இந்தியாவின் தவறான வரைபடத்தைப் வெளியிடுவார்களா ?" என்று குறிப்பிட்டார்.