தென் மேற்கு வங்க கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது...

நேற்று தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடற் பகுதியில் நிலவி இருந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி அதே இடத்தில் நீடிக்கிறது, இது மேலும் வலுப்பெற்று அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதன் காரணமாக தென் தமிழக கடலோர மாவட்டத்தில் ஒர் இரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதே போல் மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடற்பகுதிகளில் மணிக்கு 30ல் இருந்து 50 கிலோ மீட்டர் வரை காற்று வீசும் என்பதால் அந்த பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

 ஆனால்,கடந்த 24 மணி நேரத்தில் மழை எதுவும் பதிவாகவில்லை.

சென்னையை பொருத்த வரை வானம் பகுதி மேகமூட்டத்துடன் காணப்படும்,அதிகபட்ச வெப்பநிலை 32டிகிரி செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலையாக 24டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், மன்னர் வளைகுடா மற்றும் குமரி கடற்பகுதியில் மீனவர்கள்  மீன் பிடிக்க  செல்ல வேண்டாம்  எனவும், புயல் எச்சரிக்கை  விடுக்கப்பட்டு  உள்ளதால், மீனவர்கள் கரைக்கு  திரும்பி உள்ளனர்.

அதே போன்று மறு அறிவிப்பு வரும் வரை,மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என  தெரிவிக்கப்பட்டு உள்ளது.