8 வழிச்சாலைக்கு புது கணக்கு போட்ட புத்திசாலி...!  

சென்னை டு சேலம் 8 வழிச்சாலைக்கு  தமிழக மக்களிடேயே பெரிய எதிர்ப்பு கிளம்பி உள்ளது

சென்னை டூ சேலம் வரை  சாலை அமைக்க உள்ளதால், விவசாயிகள் தங்கள் நிலங்களை தாரை வார்க்கும் நிலை ஏற்பட உள்ளது. இதற்காக எந்த  விவசாயிகளும் நிலத்தை கொடுக்க முன் வர தயங்குகின்றனர்.

பெரும்பாலோனோர் போராட்டத்தில் குதித்து உள்ளனர். சில விவசாயிகள் மட்டுமே நிலத்தை கொடுக்க ஓகே சொல்லி இருக்கிறார்கள்....

இந்நிலையில் இந்த சாலை அவசியம் தேவை தானா..? எதற்காக இந்த சாலை..? இந்த சாலை அமைக்கப்பட்டால் இதனால் என்ன பயன்..? மக்கள் எந்த விதத்தில் பயன்  அடைவார்கள் என்ற பல கோணத்தில் ஆராயப்பட்டு வருகிறது.

இதற்கும் முன்னதாக சேலம் டூ சென்னை செல்ல ஏற்கனவே மூன்று வழிகள் உள்ளது என்பதால் அது போதுமானதாக இருகின்றது என்றும் தெரிவிகின்றனர்

இந்நிலையில் இந்த சாலையை போட்டால், எப்படி இருக்கும் என ஒருவர் புது கணக்கு ஒன்றை போட்டு  சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளார் ....உங்கள் பார்வைக்கு......

சேலம் - சென்னை தற்போது 354 கி.மீ

புதிய வழி 277 கிமீ.

வெறும் 77 கிமீ தான் வித்தியசம்.

இப்ப கார்ல சென்னை போறோம்னு வச்சிக்குவோம்.

பழைய வழியில போன ஆகுற செலவு:

டீசல் - 18x65 = 1170

3 டோல் - 3 x 200 = 600.

மொத்தம் : 1770.

புதிய வழியில் போனா ஆகும் செலவு:

டீசல்  - 14x65 = 910

8 டோல் - 8x200 = 1600

மொத்தம் : 2510.

ஆக ரெண்டு வழிக்கும் வித்தியாசம்

750 ரூபாய் ஆகுது.

போக வர மொத்தம் 1500 ரூபாய்.

ஆனா மணி கணக்கு பாத்தா ஒரு மணி நேரம் தான் வித்தியாசம்.

8 டோல் கேட்டுல நின்னு நின்னு போறத்துக்குள்ள அந்த நேர வித்தியாசமும் சரி ஆகிடும்.

சாதாரண மக்கள், நடுத்தர மக்கள் யாரும் இவ்வளவு பணத்த வீண் பண்ணி இந்த வழியா சென்னை போகமாட்டாங்க.

இது பயன்படாமல் வீணாக போகும் சாலையாகவே இருக்கும்.

இது பணத்தை கொள்ளை அடிப்பதற்காக மட்டுமே போடப்படும் சாலை. பயன்பாட்டிற்காக அல்ல.

எந்த மாவட்டத்தும் இல்லாத அளவுக்கு ஏற்கனவே சேலம் - சென்னைக்கு மூனு வழி இருக்கு.

நெரிசல் இல்லாம விபத்து இல்லாம மக்கள் போயிட்டு தான் இருக்காங்க...."

- இவ்வாறு அதில் பதிவிட்டு உள்ளார் அந்த நபர். இந்த தகவல் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.