அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் எப்போது முதல்  நேரடி வகுப்புகள் நடைபெறும் என்று புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட கல்லூரிகள் பின்னர் ஆன்லைன் மூலம் பாடங்களையும் செமஸ்டர் தேர்வுகளையும் நடத்தி வருகிறது. பின்னர் தொற்று குறைந்தவுடன் நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஆனால், பொறியியல், பாலிடெக்னிக் மற்றும் கலை, அறிவியல் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைன் வழியாகவே நடைபெற்று வருகின்றன. பின்னர் மார்ச் 7-ம் தேதி முதல் பொறியியல் மாணவர்களுக்கு மீண்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருதந்து.

செய்முறை தேர்வு ஜூன் 18ம் தேதி நடைபெறும் என்றும், அதேபோல் இறுதி செமஸ்டருக்கான எழுத்துத் தேர்வு ஜூன் 28ம் தேதி வரை நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதன்பிறகு கல்லூரிகளில் கோடை விடுமுறை விடப்படும் எனவும், அடுத்த கல்வி ஆண்டிற்கான வகுப்புகள் ஆகஸ்ட் 10 முதல் தொடங்கப்படும் என்றும், கல்லூரிகள் திறக்கப்படும் எனவும் அண்ணா பல்கலை கழகம் தெரிவித்துள்ளது.