a man suicide due to delaying marriage

பொண்ணு செட் ஆகலன்னு....மேம்பாலத்தில் இருந்து குதித்த வாலிபர்...சென்னையில்...!

திருமணம் ஆகாத விரக்தியில்,பாலத்தின் மீதிருந்து சாலையில் குதித்த இளைஞர் ஓடும் கார் மீது விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

திருவான்மியூர்

திருவான்மியூரில் உள்ள திருவள்ளுவர் நகரை சேர்ந்த சுந்தரம் என்பவற்றின் மகன் வசந்த். இவர் நேற்று நும் தினம் 9 மணி அளவில் ஆர்.கே சாலை ராயபேட்டை சாலை சந்திப்பில் உள்ள பாலத்தின் மீது ஏறி, பாலத்தின் மேலிருந்து கீழே குதித்தார்.

கார் மீது விழுந்த வசந்த்

கல்யாணம் ஆகவில்லை என்பதற்காக் சில நாட்களாக விரக்தியில் இருந்த வசந்த் , தற்கொலை செய்து கொள்வதற்காக பாலத்தின் மேலிருந்து கீழே குதிக்கும் போது, எதிர்பாராத விதமாக, சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது விழுந்தார்.

காரைஓட்டி வந்த நபர், பயந்து தலைதெறிக்க ஓட, அப்போது தான் தெரிய வந்துள்ளது. மேலிருந்து ஒரு நபர் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தது...வசந்த் விழுந்த வேகத்தில் அவருக்கு தலை கை கால் என அனைத்து இடத்திலும் பலத்த காயம் ஏற்பட்டாலும் உயிர் பிழைத்து விட்டார்.

உடனடியாக வசந்தை அருகில் உள்ளவர்கள் மீட்டு ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், நீண்ட காலமாக திருமணம் ஆகாமல் தள்ளி தள்ளி சென்றதால் மிகுந்த மன வேதனை அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.