School Leave : வெளுத்து வாங்கும் மழை..! பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எந்த மாவட்டம் தெரியுமா.?
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்து வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உ்ள்ள பள்ளிகளுக்கு மட்டும் மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார். இதேபோல வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
ரெட் அலர்ட்- மழை எச்சரிக்கை
கேரளாவில் கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென் மேற்கு பருவமழை இடையில் தொய்வடைந்த நிலையில் தற்போது தீவிரம் அடையத் தொடங்கியுள்ளது.தற்போது வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்தம் உருவாகியுள்ளது.இதன் காரணமாக கேரள எல்லையோர தமிழ்நாட்டிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும், வட தமிழ்நாட்டின் உள் மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்திலும் ஒரு சில இடங்களிலும் மழை பெய்துள்ளது. கேரளா மற்றும் கர்நாடக மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மீண்டும் மின் கட்டணம் உயர்வு! சாமானிய மக்களுக்கு இன்னொரு ஷாக் கொடுத்த தமிழக அரசு!
நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை
இந்தநிலையில் நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையின் காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் தண்ணீர் தேங்கி காட்சியளிக்கிறது.இந்த சூழ்நிலையில் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்ற காரணத்தால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் கனமழை பெய்து வருவதால் வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மாஹேவில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை எதிரொலி; பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவு - மாணவர்கள் குஷி