கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவம்: தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறையா?குழப்பத்தில் மாணவர்கள்,பெற்றோர்கள்
கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளியை வன்முறையாளர்கள் சூறையாடிய நிலையில், எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அனைத்து தனியார் பள்ளிகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டது, இந்தநிலையில் தமிழகத்தில் பெரும்பாலான பள்ளிகள் இயக்கின, ஒரு சில பள்ளிகள் தங்களது எதிர்ப்புகளை காட்டும் வகையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளது.
பள்ளியை சூறையாடிய வன்முறையாளர்கள்
கள்ளக்குறிச்சியில் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி ஶ்ரீமதி மர்ம மரணம் தொடர்பாக கடந்த 6 நாட்களாக தொடர் போராட்டம் நடைபெற்று வந்தது. இந்தநிலையில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதையடுத்து பள்ளியில் உள்ள பேருந்துகளுக்கு தீவைத்து கொளுத்தப்பட்டது. இதனையடுத்து பள்ளி அறையில் உள்ள மேஜைகள், நாற்காழிகள், மின் விசிறி, ஏசி உள்ளிட்ட பொருட்களையும் தூக்கி எரிந்தனர். மேலும் பள்ளியில் பயிலும் மாணவர்களின் டிசிக்களும் எரிக்கப்பட்டது. மேலும் பள்ளியில் அலுவலகம் முற்றிலும் உருகுலைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக தனியார் பள்ளியின் செயல்பாடு முற்றிலும் முடங்கியுள்ளது. இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக 300க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பள்ளிகளுக்கு விடுமுறையா?
மேலும் மாணவி மர்ம மரணம் தொடர்பாக பள்ளி தாளாளர் குமார்,செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கர் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்த நிலையில், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்தநிலையில் பள்ளியில் வன்முறையாளர்கள் சூறையாடியதை கண்டிக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மெட்ரிக்குலேசன்,சிபிஎஸ்சி பள்ளிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த அறிவிப்பிற்கு பள்ளி கல்வித்துறை எதிர்ப்பு தெரிவித்தது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. பள்ளி கல்வித்துறையின் உத்தரவையடுத்து சென்னையில் இன்று பெரும்பாலான தனியார் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கின, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தாலும் ஒரு சில பள்ளிகள் இயங்கின, . புதுக்கோட்டையில் 70% தனியார் பள்ளிகள் இயங்கவில்லை, மாணவர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் மூலமாக பள்ளி நிர்வாகங்கள் அறிவிப்பு கொடுத்துள்ளது. இதே போல தமிழகத்தில் பெரும்பாலன பள்ளிகள் இயங்கினாலும் ஒரு சில பள்ளிகள் விடுமுறை அளித்துள்ளது.
கருப்பு பேட்ஜ் அணிந்து சென்ற ஆசிரியர்கள்
இந்த நிலையில் தமிழகத்தில் பெரும்பாலான பள்ளிகள் இயங்கிய நிலையில் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்களது எதிர்ப்புகளை தெரிவிக்கும் வகையில் கையில் கருப்பு பட்டை அணிந்து பள்ளிக்கு வந்திருந்தனர். அதே நேரத்தில் பள்ளிகள் இயங்குமா? இயங்காதா என பள்ளிகள் சார்பாக சரியான தகவலை தெரிவிக்காத காரணத்தால் பெரும்பாலான இடங்களில் மாணவர்கள் மற்றும் பொற்றோர் குழப்பம் அடையும் நிலையும் ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம்...! தனியார் பள்ளி ஆசிரியைகளை அதிரடியாக கைது செய்த போலீஸ்