நாகப்பட்டினத்தில் உள்ள பள்ளியில் குடியரசு தினத்தன்று தேசிய கொடியை ஏற்றி வைத்து மாணவர்களுக்கு இயற்கை வேளாண் விவசாயி வரதராஜன் குடைகள் வழங்கினார்.
சீர்காழியை அடுத்த ஆலங்காடு, வெள்ளகுளம் கிராமங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அகரவட்டாரம் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி ஆண்டாள் சீனிவாசன் நினைவு அறக்கட்டளையின் சார்பில், அதன் தலைவர் வரதராஜன் தேசியக் கொடி ஏற்றி வைத்து மாணவர்களுக்கு குடைகள் வழங்கினார்.
இதேபோல், வெள்ளகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் குடைகள் வழங்கி இயற்கை விவசாயி வரதராஜன் பேசினார்.
இதில் பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் மாதானம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவர் உத்திராபதி, வேட்டங்குடி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சீனுவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
