27 பேரை விரட்டி, விரட்டி கடித்த நாய்க்கு ரேபிஸ் தொற்று..! கடிபட்ட சிறுவர்கள், பெண்களுக்கு மீண்டும் சிகிச்சை
சென்னை வண்ணாரப்பேட்டையில் தெருவில் நடந்து சென்ற பெண்கள், சிறுவர்களை விரட்டி, விரட்டி கடித்த நாய்க்கு ரேபிஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நாயிடம் கடி வாங்கியவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படவுள்ளது.
விரட்டி, விரட்டி கடித்த நாய்
சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதியான ராயபுரம் பகுதியில் உள்ள வண்ணாரப்பேட்டையில், கல்வி நிலையங்கள், கடைகள், அலுவலங்கள் உள்ளிட்ட ஏராளமானவை உள்ளது. இதன் காரணமாக தினமும் அந்த பகுதியில் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்வார்கள். இந்தநிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மாலை நேரத்தில் பள்ளி முடிந்து பெற்றோர்கள் தங்களது குழந்தையை வீட்டிற்கு அழைத்து சென்றனர்.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த தெரு நாய் ஒன்று பொதுமக்களை பார்த்து குறைந்து கொண்டிருந்துள்ளது. ஒரு கட்டத்தில் அணைவரையும் விரட்டி, விரட்டி கடிக்க ஆரம்பித்தது.இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஓட்டம் பிடித்தனர் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் கால் தவறி கீழே விழுந்தனர்.
நாய்க்கு ரேபிஸ் தொற்று
மேலும் நாய் விரட்டி, விரட்டி கடித்ததில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட 27 பேர் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு நாய் கடி ஊசி செலுத்திக்கொண்டனர். இதனிடையே அந்த நாயை அப்பகுதியில் உள்ளவர்கள் கல்லால் தாக்கி அடித்து கொன்றனர். இதனையடுத்து நாயை உடலை பரிசோதனைக்கு கொண்டு சென்ற கால்நடை மருத்துவர்கள் நாய்க்கு ரேபிஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கண்டறிந்துள்ளனர். இதனையடுத்து நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5 டோஸ் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்