கன்னியாகுமரி

கன்னியாகுமரியில் பேருந்து மற்றும் இரயில் நிலையங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 800 கிலோ ரேசன் அரிசியை வருவாய் துறையினர் மற்றும் காவலாளர்கள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். ரேசன் அரிசி  கடத்தல்காரர்களை காவலாளர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ரேசன் அரிசியை கடத்த முயன்றவர்கள் யார்? என்று வழக்குப்பதிந்து காவலாளர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர். பேருந்து மற்றும் இரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமிராவில் கடத்தல்காரர்கள் குறித்து தகவல் கிடைக்கிறதா? என்று காவலாளர்கள் விசாரித்து வருகின்றனர்.