நான்கு வருடமாக சேமித்த பணத்தை புயல் நிவாரண நிதியாக கொடுத்த 8வகுப்பு படிக்கும் மாணவன்! குவியும் வாழ்த்துக்கள்
கஜா புயலில் சிக்கிய டெல்டா மக்களுக்கு தனது நான்கு வருட சேமிப்பை நிவாரண நிதியாக கொடுத்த சிறுவனுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
தமிழக கடலோர மாவட்டங்களை கடுமையாக தாக்கிய கஜா புயலால், மிகப் பெரிய சேதத்துக்கு டெல்டா மாவட்ட மக்கள் ஆளகியுள்ளார்கள். 45 க்கும் மேற்பட்டவர்களின் உயிர்ச்சேதமும், பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பில், கால்நடைகள், பயிர்கள், மரங்கள், படகுகள், வீடுகள், சொத்துக்கள் நாசமாகியுள்ளன.
அரசு தரப்புக்கு இணையாக தன்னார்வளர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்று வரை உதவிகளை செய்து வருகிறார்கள். இதுபோல் பல்வேறு துறையைச் சேர்ந்த பிரபலங்கள் தனியாகவும், முதலமைச்சரின் நிவாரண நிதிக்கும் பங்களிப்புகளை செய்து வருகிறார்கள்.
நான்கு வருடமாக சேமித்த 25000 ரூபாய் பணத்தை டெல்டா மாவட்ட புயல் நிவாரண நிதியாக அளித்த தூத்துக்குடியை சேர்ந்த 8வகுப்பு படிக்கும் மாணவன் அக்சய். தற்போது இந்த மாணவனின் செயலை பாராட்டி வருகின்றனர்.