8 arrested for cut down redwood trees

ஆந்திராவில் செம்மரம் வெட்டியதாக 8 தமிழர்களை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.3 கோடி மதிப்புள்ள செம்மரங்களை பறிமுதல் செய்தனர்.

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ராஜம்பேட்டை பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியை மேற்கொண்டனர்.

அப்போது செம்மரம் வெட்டி கொண்டு தோளில் சுமந்து வந்த கூலி தொழிலாளர்களை வனத்துறையினர் மடக்கிபிடிக்க முயன்றனர்.

ஆனால் அவர்கள் வனத்துறையினர் மீது கற்களையும் மற்றும் கோடாரிகளையும் வீசி தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து வனத்துறையினர் தற்காப்பிற்காக வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதைதொடர்ந்து செம்மரங்களை ஆங்காங்கே போட்டு விட்டு தப்பி ஒடினர்.

இதில் 8 பேரை வலைத்து பிடித்த போலீசார் அந்த பகுதியில் இருந்த ரூ. 3 கோடி மதிப்புள்ள 6.5 டன் எடையுள்ள 191 செம்மரங்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.