விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் சோதனை... ரூ.18.37 லட்சம் ரொக்கம் மற்றும் பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல்!!

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 18.37 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர். 

8.37 lakh cash and many important documents seized in vijayabaskars home raid

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 18.37 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர். முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். மேலும் விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்த போது, ஊத்துக்கோட்டை, மஞ்சக்கரணை என்ற பகுதியில் மருத்துவமனையே கட்டப்படாத நிலையில் 250 படுக்கை வசதிகளுடன் 2 ஆண்டுகளாக செயல்பட்டு வருவதாகவும், புதிய மருத்துவ கல்லூரி தொடங்குவதற்கு மருத்துவமனை தகுதியானது எனவும் சான்றிதழ் வழங்கியுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: “தமிழக கட்சிகளும் லிஸ்டில் இருக்கு”.. லெட்டர் பேடு கட்சிகளை அதிரடியாக தூக்கிய தேர்தல் ஆணையம்.!

மேலும் திருவள்ளூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முறைகேடாக அனுமதி கொடுக்கப்பட்டதாகவும் கூறி விஜயபாஸ்கர் உள்ளிட்ட ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் சென்னையில் உள்ளிட்ட 13 இடங்களில் சோதனை மேற்கொண்டனர். விஜயபாஸ்கரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் காலை 6 மணி முதல் 8 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த சோதனை பிற்பகல் 3.30 மணிக்கு நிறைவடைந்தது.

இதையும் படிங்க: 500 கோடி ஊழல்.. ரெய்டுக்கான பின்னணி இதுதான்.. உண்மையை போட்டு உடைத்த எஸ்.பி வேலுமணி!

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 18.37 லட்சம் ரூபாய் ரொக்கம், 1,872 கிராம் தங்க நகைகளும், 8.28 கிலோகிராம் வெள்ளி பொருட்கள் கண்டறியப்பட்டதாகவும் வழக்கில் தொடர்புடைய 120 ஆவணங்கள், 1 வன் தட்டு, 1 பென்டிரைவ், 2 ஐ போன்கள் மற்றும் 4 வங்கி பாதுகாப்பு பெட்டக சாவிகள் வழக்கு விசாரணைக்காக கைப்பற்றப்பட்டதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios