தமிழகத்தில் 600 கி.மீ. நீளத்துக்கு அதிகமாக ஆறு மாசுபட்டுள்ளன என்று மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை அமைச்சகம் அறிக்கை அளித்துள்ளது.

நாட்டில் ஆறுகளின் மாசுபாடு குறித்து எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஹர்சவர்தன் பதில் அளித்தார். அவர் பேசியதாவது-

மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியம், மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்களுடன் இணைந்து, நாட்டில் உள்ள ஆறுகளின் நீரின் தரம் ஆகியவற்றை கண்காணித்து வருகிறது. இந்த கண்காணிப்பு தேசிய நீர் தரம் கண்காணிப்பு திட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கையின்படி, கடந்த 2010ம் ஆண்டு நிலவரப்படி, நாட்டில் 150 ஆறுகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. 2015ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் 275 ஆறுகளில் 302 பாதைகள் மாசுபட்டுள்ளன. மேலும் ஆறுகள் மாசுபடுவதை கண்காணிக்கவும், நீரின் தரத்தை பராமரிக்கவும் கடந்த 2010ம் ஆண்டு 1085 கண்காணிப்பு நிலையங்கள் அமைத்தது. அதை 2015ம் ஆண்டு  1275 ஆக உயர்த்தியது.

தமிழகத்தைப் பொருத்தவரை பவானி, காவேரி, பாலாறு, சரபங்கா, தாமிரபரணி, திருமணிமுத்தாறு, வஷிஸ்டா ஆகிய ஆறுகள் மிக மோசமாக மாசுபட்டுள்ளன. இந்த ஆறுகள் சேலம், ேவலூர், ஈரோடு, நாமக்கல், மற்றும் நெல்லை மாவட்டங்களில் பாய்கின்றன. தமிழகத்தில் 7 முக்கியநதிகளும், அதன் கிளைநதிகள் 100க்கும்அதிகமாக இருக்கின்றன.

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்களுடன் இணைந்து ஆறு மாசுபடுவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுத்து வருகின்றன. மாசுபடுத்தும் நிறுவனங்கள், தனிநபர்கள் மீது மாசுக்கட்டுப்பாடு தடுப்புச் சட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

இவ்வாறு அவர் ெதரிவித்தார்.