காணாமல் போன 6 கிராமங்கள்... தடம் தெரியாமல் தாண்டவம் ஆடி அழித்த கஜா!! அதிரவைக்கும் தகவல்...
கஜா புயலின் தாக்கத்தால் ஆறு கிராமங்கள் இருந்த தடம் தெரியாமல் அழிந்துவிட்டதாக அதிரவைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
கஜா புயலால் காவிரி டெல்டா மாவட்டங்கள் சீர்குலைந்துள்ளது. ஏராளமான தென்னை மரங்கள் சாய்ந்துள்ளதுடன், பல ஏக்கர் விவசாய நிலங்களும் பாதிப்படைந்துள்ளன. ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து, குடிக்கக் கூட தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றனர். புயலில் சிக்கி 45 பேர் பலியான நிலையில், 82 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும். 2 லட்சம் மரங்கள் சாய்ந்ததோடு, 735 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், கஜா புயலினால் செல்போன் கோபுரங்களும் சாய்ந்துவிட்டன. மாணவர்கள் தங்களது நோட்டுப்புத்தகங்களை இழந்துவிட்டனர். பெண்களோ சாலைகளிலும், முகாம்களிலும் சமைத்து வருகின்றனர். ஆண்கள் தங்களது வீடுகளின் கூரைகளைச் சீரமைத்து வருகின்றனர்.
வேளாங்கண்ணியிலிருந்து தலைஞாயிறு கிராமத்துக்குப் பயணிக்கும் வழியில் மிக மோசமான நிலையைக் காண முடிகிறது. சடையன்கொட்டகம், சேரன்குளம், காரப்பிடகை, சிந்தாமணி, பளத்தன்கரை, ஏகராஜபுரம் ஆகிய கிராமங்கள் இந்த புயலினால் காணாமல்போய்விட்டன. இப்பகுதிகளில் ஒரு மரம் கூட புயலின் தாக்கத்திலிருந்து தப்பிக்கவில்லை. பளத்தன்கரை கிராமம் இருந்ததற்கான தடமே தெரியவில்லை என ஒரு அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. வேதாரண்யம் தாலுகாவில், கான்கிரீட் வீடுகளைத் தவிர கஜாவால் பாதிக்கப்படாதவை என்று எதுவுமில்லை.