தமிழகத்தில் 500 மதுபான கடைகள் மூடப்படும்... அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி அறிவிப்பு!!

தமிழகத்தில் 500 மதுபான கடைகள் மூடப்படும் என மின்சாரத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.

500 tasmacs will be closed in tamilnadu announced minister senthil balaji

தமிழகத்தில் 500 மதுபான கடைகள் மூடப்படும் என மின்சாரத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். இதுக்குறித்து சட்டப்பேரவையில் பேசிய அவர், தமிழகத்தில் மொத்தம் 5 ஆயிரத்து 329 மதுபான கடைகள் இயங்கி வருகின்றன. அதில், தகுதியான 500 சில்லறை விற்பனைக் கடைகளை கண்டறியப்பட்டு அவை மூடுப்படும். டாஸ்மாக் பணியாளர்களுக்கான தொகுப்பூதியம் உயர்த்தப்படும். டாஸ்மாக் மேற்பார்வையாளர்களுக்கு ரூ.1,100 தொகுப்பூதியம், விற்பனையாளர்களுக்கு ரூ.930 தொகுப்பூதியம் உயர்த்தி தரப்படும்.

இதையும் படிங்க: அரசுப் பேருந்தில் சில்மிஷம் செய்த ராணுவ வீரர்; அதிரடி காட்டிய பெண் காவலர்

அதேபோல் டாஸ்மாக் உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.840 தொகுதிப்பூதியம் உயர்த்தி வழங்கப்படும். ஏப்ரல் மாதம் முதல் டாஸ்மாக் பணியாளர்களுக்கான உயர்த்தப்பட்ட தொகுப்பூதியம் வழங்கப்படும். டாஸ்மாக் ஊழியர்களுக்கு தொகுப்பூதியம் உயர்த்தி வழங்கப்படுவதன் காரணமாக தமிழ்நாடு அரசுக்கு ஒரு ஆண்டுக்கு ரூ.31.57 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும், அதிக உயர்மின் அழுத்தம் கொண்ட மின்பாதைகளில் ஏற்படும் பழுதுகளை கண்டறிய ட்ரோன்கள் கொள்முதல் செய்யப்படும்.

இதையும் படிங்க: அமைச்சர் செந்தில் பாலாஜியை விமர்சனம் செய்த பாஜக நிர்வாகிக்கு 26ம் தேதி வரை சிறை விதித்து உத்தரவு

மதுரை, கரூர், கோவை மாநகராட்சி பகுதிகளில் மேல்நிலை மின்கம்பிகள் புதைவட கம்பிகளாக மாற்றப்படும். நடப்பாண்டில் 50 ஆயிரம் விவசாய மின் இணைப்புகள் புதியதாக வழங்கப்படும். அரசு – தனியார் பங்களிப்புடன் 5 ஆயிரம் மெகாவாட் காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்கள் நிறுவப்படும். மின்சார உற்பத்திக்காக வெளிநாடுகளில் இருந்து குறைந்த விலையில் நிலக்கரி இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios