Asianet News TamilAsianet News Tamil

அரசுப் பேருந்தில் சில்மிஷம் செய்த ராணுவ வீரர்; அதிரடி காட்டிய பெண் காவலர்

நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரத்தில் அரசுப் பேருந்தில் தனியாக பயணித்த பெண் காவலரிடம் அத்துமீறிய முன்னாள் ராணுவ வீரரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

former army man arrested in sexual harassment case in nilgiris
Author
First Published Apr 12, 2023, 6:59 PM IST | Last Updated Apr 12, 2023, 6:59 PM IST

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பணியாற்றும் பெண் காவலர் ஒருவர் நேற்று பணி நிமித்தமாக கோவை சென்று விட்டு குன்னூர் திரும்பிய வழியில் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தில் ஏறியுள்ளார்.

அதே பேருந்தில் பின் இருக்கையில் அமர்ந்து வந்த கோத்தகிரி அஜூர் பகுதியைச் சேர்ந்த ராஜ் என்பவரது மகன் தர்மன் (வயது 56) பயணித்துள்ளார். முன்னாள் ராணுவ வீரரான இவர் பின் இருக்கையில் இருந்து கொண்டே பெண் காவலரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

முதலில் தட்டிக் கழித்த பெண் காவலர் கடுப்பாகவே தர்மனை தாக்கியுள்ளார். அதற்கு தர்மன் அந்த பெண் காவலரை திருப்பித் தாக்கியுள்ளார். பேருந்தில் இருந்தவர்கள் தர்மனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது எனக்கு எஸ்பி தெரியும், டிஎஸ்பி தெரியும் என்றெல்லாம் வாரிவிட்டுள்ளார். இதனை கேட்டு பேருந்து பயணிகள் ஒரு வேலை நிஜமாக இருக்குமோ என்று பின்வாங்கியுள்ளனர்.

அஷ்வின் போட்ட பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

பின்பு பேருந்து நடத்துனர் மற்றும் தர்மன் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காட்டேரி பகுதியில் தர்மனை காப்பாற்றுவதாக கருதி இறக்கி விட்டுள்ளார். பெண் காவலரை காட்டேரியில் இறங்க வேண்டாம் என்றும் நடத்துனர் கூறியுள்ளார். ஆனால் எதைக்கண்டும் அஞ்சாத பெண் காவலர் அவரும் காட்டேரியில் இறங்கியுள்ளார்.

தர்மன் தப்பியோடுவதற்காக இனியொரு பேருந்தில் ஏறிய போது பெண் காவலரும் அதே பேருந்தில் ஏறி குன்னூர் லெவல் கிராஸ் பகுதியில் பேருந்தை நிறுத்தி சக காவலர் உதவியுடன் தர்மனை இறக்கி குன்னூர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

திருச்சியில் 7 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று - மருத்துவர்கள் எச்சரிக்கை

விசாரணையில் தர்மன் பெண் காவலரிடம் அத்து மீறியது உறுதியானதைத் தொடர்ந்து காவலரிடம் புகாரை பெற்றுக் கொண்டு குன்னூர் ஆய்வாளர் சதீஷ், உதவி ஆய்வாளர் ஆனந்தராஜ் மற்றும் காவல்துறையினர் தர்மனை கைது செய்து மருத்துவ பரிசோதனைக்கு பின் குன்னூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios