BREAKING: குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி.. நாளை முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது..!

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க  மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சரால் சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மானியக் கோரிக்கையின் போது 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள்
கண்டறியப்பட்டு மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

500 Tasmac shops will be closed from tomorrow..! Tamil Nadu Government Announcement

முதல்வரின் உத்தரவை தொடர்ந்து தமிழகத்தில் நாளை முதல் 500 டாஸ்மாக் கடைகளை மூடப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

தமிழகத்தில் மது விற்பனையால் இளைய சமுதாயம் பாதிக்கப்படுவதாகவும் இதனை கட்டுப்படுத்த தமிழகத்தில் மது விலக்கை அமல் படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது.  தமிழகம் முழுவதும் தற்போது 5,329 மதுபான சில்லரை விற்பனை கடைகள் உள்ளது. டாஸ்மாக் மூலம் மாநில அரசுக்கு வருவாய் 2021-22ல் 36,056 கோடி ரூபாய் கிடைத்தது. 2022-23 ஆம் ஆண்டில் 44ஆயிரத்து 098 கோடியாக அதிகரித்தது. இதனையடுத்து  படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்தும் நோக்கத்துடன் தமிழ்நாட்டில் உள்ள 5329  டாஸ்மாக் மதுக்கடைகளில் 500 கடைகள்  மூடப்படும் என்று கடந்த ஏப்ரல் 12-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானிய கோரிக்கையின் போது அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார்.

இதையும் படிங்க;- செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறைக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! பரபரப்பு உத்தரவிட்ட நீதிபதிகள்

500 Tasmac shops will be closed from tomorrow..! Tamil Nadu Government Announcement

இதனையடுத்து,  500 மதுக்கடைகள் மூடுவது தொடர்பாக தமிழக அரசு அமைதி காத்து வந்தது. 5 மணி நேரத்தில் தயாரிக்கப்பட வேண்டிய பட்டியலை இவ்வளவு நாட்களாகியும் தமிழக அரசால் தயாரிக்க முடியவில்லை என்பதை நம்ப முடியவில்லை அன்புமணி விமர்சித்திருந்தார். இந்நிலையில், நாளை முதல் 500 சில்லறை மதுபான கடைகள் மூடப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

500 Tasmac shops will be closed from tomorrow..! Tamil Nadu Government Announcement

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்;- தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க  மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சரால் சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மானியக் கோரிக்கையின் போது 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க;-  தொடரும் மரணங்கள்.. தமிழக அரசு மதுக்கடைகளில் விற்கப்படுவது மதுவா, நஞ்சா, அமிலமா? அன்புமணி ராமதாஸ்.!

500 Tasmac shops will be closed from tomorrow..! Tamil Nadu Government Announcement

மேற்படி, அறிவிப்பிற்கிணங்க 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளைக் கண்டறிந்து மூடிட 20.04.2023 நாளிட்ட அரசாணை எண்.140, உள் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை வெளியிட்டது. மேற்படி, அரசாணையை செயல்படுத்தும் விதமாக மாநிலம் முழுவதும் உள்ள மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் 500 கடைகளை கண்டறிந்து அவற்றை 22.6.2023 அன்று முதல் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், மேற்குறிப்பிட்ட 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் நாளை முதல் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios