கபடி நாடகம் ஆடறத விட்டுட்டு.. கள்ளச்சாராயத்தை ஒழிக்கிற வழிய பாருங்க.. ஆளுங்கட்சியை அலறவிடும் TTV.தினகரன்

கடந்த ஆண்டு விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 20க்கும் அதிகமானோர் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த பிறகும், கள்ளச்சாராயத்தை ஒழிக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திறனற்ற திமுக அரசால் உயிரிழப்புச் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன.

5 people died due to illicit liquor in kallakurichi.. TTV Dhinakaran condemns DMK government tvk

கள்ளக்குறிச்சி அருகே கள்ளச்சாராயம் அருந்தியதால் நான்கு பேர் உயிரிழந்திருப்பதாகவும், பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் வரும் செய்திகள் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: கள்ளக்குறிச்சி அருகே கள்ளச்சாராயம் அருந்தியதால் நான்கு பேர் உயிரிழந்திருப்பதாகவும், பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் வரும் செய்திகள் மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது. கடந்த ஆண்டு விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 20க்கும் அதிகமானோர் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த பிறகும், கள்ளச்சாராயத்தை ஒழிக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திறனற்ற திமுக அரசால் உயிரிழப்புச் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன.

இதையும் படிங்க: Annamalai : கள்ளச்சாராய மரணம்.. இந்த இரண்டு அமைச்சர்களையும் பதவியில் இருந்து உடனே நீக்கிடுக- சீறும் அண்ணாமலை

ஒவ்வொரு முறை ஏற்படும் கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு பிறகும், அரசு நிர்வாகத்தின் தவறுகளை மறைக்க, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம், காவல் உயர் அதிகாரிகள் இடமாற்றம், கள்ளச்சாராயத்தை ஒழிக்க அதிரடி சோதனை எனும் கபட நாடகத்தை வாடிக்கையாக கொண்டிருக்கும் திறனற்ற திமுக அரசின் செயல்பாடுகள் கடும் கண்டனத்திற்குரியது.

இதையும் படிங்க: kallakurichi: கள்ளச்சாராய மரணத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும் - இராமதாஸ் காட்டம்

எனவே, இம்முறையும் அரசு நிர்வாகத்தின் தவறை மறைக்க காரணம் தேடாமல், ஊழல் மற்றும் முறைகேடு புகார், கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களின் வரிசையில் இணைந்திருக்கும் கள்ளச்சாராய விற்பனையையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை இனியாவது மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios