திருச்சி விமான நிலையத்தில் ரூ.5.25 லட்சம் மதிப்புள்ள 200 கிராம் எடையுள்ள 7 தங்க கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

திருச்சி விமான நிலையத்தில் இருந்து தங்க கட்டிகள் கடத்த இருப்பதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. 

இதையடுத்து திருச்சி விமான நிலையத்திற்கு வரும் பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். 

இந்த சோதனையில் முகமது முஸ்தபா என்பவர் ரூ. 5.25 லட்சம் மதிப்புள்ள 200 கிராம் எடையுள்ள 7 தங்க கட்டிகளை மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. 

இதைதொடர்ந்து அவரிடம் இருந்து சுங்கத்துறை அதிகாரிகள் தங்க கட்டிகளை பறிமுதல் செய்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். 

தகவலறிந்து வந்த போலீசார் முகமது முஸ்தபாவை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.