Asianet News TamilAsianet News Tamil

பரபரப்பு !! பிரதமர் மோடி பங்கேற்கவிருந்த தொடக்கவிழாவில் 4 பேருக்கு கொரோனா..

செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழாவில் பங்கேற்கவிருந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொற்று உறுதியான நான்கு பேரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 

44th Chess Olympiad Opening Ceremony - 4 corona case positive
Author
Tamilnádu, First Published Jul 28, 2022, 11:14 AM IST

44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் இன்று முதல் நடக்கவிருக்கிறது. சென்னை நேரு விளையாட்டு அரங்கில் இன்று மாலை 6 மணிக்கு செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழா நடைபெறவிருக்கிறது. இதில் பிரதமர் மோடி கலந்துக்கொண்டு, உரையாற்றுகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். நாளை முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை 14 நாட்கள் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுகின்றன. 

இதில் 188 நாடுகளில் இருந்து 3000க்கும் மேற்பட்ட செஸ் வீரர்கள், வீராங்கனைகள் பங்குப்பெற வருகை புரிந்துள்ளனர். இந்நிலையில் சென்னை வரும் பிரதமர் மோடியை வரவேற்க பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை மாநகர் முழுவதும் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அவர் செல்லும் வழிநெடுகிலும் பரதநாட்டியம், மயிலாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நேரு விளையாட்டு அரங்கில் செஸ் ஒலிம்பியாட் விழாவை தொடங்கி வைப்பதற்கு முன்பாக, 2 மணி நேர கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.

மேலும் படிக்க:செஸ்ஸூடன் பெருமை மிகு தொடர்புடைய தமிழகம்.! ஒலிம்பியாட் தொடக்க விழாவிற்காக ஆர்வமுடன் காத்திருக்கிறேன்- மோடி

செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழாவில் பங்கேற்கவிருந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேரு விளையாட்டரங்களில் கலைநிகழ்ச்சி நடைபெறவுள்ள நிலையில், பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் செஸ் ஒலிம்பியாட் கலைக்குழுவை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கலைவிழாவில் பங்கேற்கும் 900 பேருக்கு பரிசோதனை செய்ததில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. தொற்று உறுதியான நான்கு பேரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கு பெறும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அனுமதிக்கப்படுகின்றனர். குரங்கம்மை மற்றும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டால், அவர்களை தனிமைப்படுத்தவும் தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டிருந்தது. 

மேலும் படிக்க:மக்களே கவனத்திற்கு !! வண்டலூர் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா மூடல்.. மீண்டும் எப்போது திறப்பு..?

Follow Us:
Download App:
  • android
  • ios