செல்ஃபி மோகத்தால் 4 வயது குழந்தை பரிதாபமாக ஆற்றில் விழுந்து உயிரிழந்தது. கர்நாடகம் மற்றும் கேரளாவில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் தமிழகமெங்கிலும் உள்ள ஆறுகளில் இப்போது தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது. காவிரி ஆற்றில் செல்லும் ஆற்று நீரை பொதுமக்கள் வியப்புடன் கண்டு ரசித்து வருகின்றனர். 

இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் மோகனூரில் வாங்கல் பாலத்தில் இருந்தபடி ஒரு பெற்றோர் காவிரியாற்றில் செல்பி எடுத்துக்கொண்டிருந்த போது தன்வந்த் 4 வயது குழந்தை தவறி ஆற்றில் விழுந்தது. இதனைக்கண்டு அங்கிருந்தவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் குழந்தையை தேடும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தன்வந்த் இன்று பிறந்த நாள் என்று கூறப்படுகிறது.  

குழந்தையை பறிகொடுத்த பெற்றோர் கதறிய அழுதனர். பெற்றோரின் செல்ஃபி மோகத்தால் 4 வயது குழந்தை அடித்து செல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காவிரி கரையோர பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

காவிரியாற்றில் நின்று செல்ஃபி எடுப்பதோ, புகைப்படம் எடுப்பதையோ பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏற்கனவே எச்சரித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் காவிரியாற்றுப் பாலத்தின் கைப்பிடி சுவர் மீது அமர வைத்து புகைப்படம் எடுத்ததால் 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.