சென்னை பாரிமுனை பகுதியில் பழைய கட்டிடத்தில் பராமரிப்பு பணி நடைபெற்று வந்த நிலையில், 4 மாடி கட்டிடம் முழுவதுமாக இடிந்து விழுந்த்து. இதனையடுத்து  இடிபாடுகளில் சிக்கியுள்ள 4 பேரை மீட்க பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். 

சென்னை கட்டிட விபத்து

சென்னை பிராட்வே அரண்மனைக்காரன் தெருவில் பழைய கட்டிடத்தில் உள்ள நான்காவது தளத்தில் புதுப்பிக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்துள்ளது. அப்பொழுது யாரும் எதிர்பார்க்காத நிலையில் கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அந்த பகுதியில் உள்ள மக்கள் பாரிமனை, பூக்கடை பகுதி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு 6க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனத்தில் வந்த மீட்புபடை வீரர்கள் கட்டிடத்தில் யாரேனும் சிக்கியுள்ளார்களா என ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே கட்டிட பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்ட 4 பேர் உள்ளே சிக்கியிருப்பதாக தகவல் வெளியானது .ஆனால் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை தீயைணைப்பு படையினரால் மீட்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து சென்னை மாநகராட்டி கேட்டுக்கொண்டதையடுத்து கட்டிட விபத்தில் சிக்கியவர்களை மீட்க அரக்கோணம் மற்றும் சென்னை அடையாறு பகுதியில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் நவீன உபகரணங்களுடன் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.

இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் கேப்டன் அவமதிப்பு! மூஞ்சியை உடைப்பேன் என மிரட்டிய நடத்துனர் சஸ்பெண்ட்.!

கட்டிடத்தில் பராமரிப்பு பணி நடைபெற்று வந்ததால். உள்ளே எந்த குடும்பங்களும் வசிக்கவில்லையென கூறப்படுகிறது. அதே நேரத்தில் கட்டிடத்தில் பராமரிப்பு பணியில் 5க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டிருந்ததால் ஏதேனும் உயிரிழப்பு ஏற்பட்டிருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 4 மாடி கட்டிடத்தின் இடிபாடுகளை அகற்றினால் மட்டுமே விபத்தில் சிக்கியவர்களின் நிலை தெரியவரும் என கூறப்படுகிறது. இந்த விபத்து காரணமாக பாரிமுனை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்

தமிழக அரசு பேருந்து என்றாலே கரும்புகை.. சக்கரம் கழண்டு ஓடுவது.. பழுதடைவது.. புலம்பும் அன்புமணி ராமதாஸ்.!