இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் கேப்டன் அவமதிப்பு! மூஞ்சியை உடைப்பேன் என மிரட்டிய நடத்துனர் சஸ்பெண்ட்.!
இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் கேப்டனும் மதுரையைச் சேர்ந்தவருமான சச்சின் சிவா. சென்னையில் இருந்து மதுரை செல்வதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு சென்றார். அப்போது கழிப்பறை வசதியுடன் கூடிய SETC பேருந்தில் பயணிப்பதற்காக ஏறியுள்ளார்.
கோயம்பேட்டில் இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணி கேப்டன் சச்சின் சிவாவை பேருந்தில் ஏற்ற மறுத்த விவகாரம் தொடர்பாக நடத்துனர் ராஜா அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் கேப்டனும் மதுரையைச் சேர்ந்தவருமான சச்சின் சிவா. சென்னையில் இருந்து மதுரை செல்வதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு சென்றார். அப்போது கழிப்பறை வசதியுடன் கூடிய SETC பேருந்தில் பயணிப்பதற்காக ஏறியுள்ளார். அப்போது, அரசு பேருந்து நடத்துனர் இதில் பயணிக்க மாற்றுத்திறனாளிகளுக்கு அனுமதி இல்லை என கூறி பேருந்தில் ஏறக்கூடாது என வாக்குவாதம் செய்தார்.
இதையும் படிங்க;- ஆபாச பேச்சு! போலீஸ்காரங்க எல்லாருமே பிராடு! போதை கணவனுக்காக வாண்டடாக வந்து சிக்கிய மனைவி.! வைரல் போட்டோ.!
அப்போது சச்சின் சிவா இதுபோன்ற பேருந்துகளில் பயணிக்க அனுமதி உள்ளது என பதிலளித்துள்ளார். இதனால், கடுப்பான நடத்துனர் ராஜா சச்சின் சிவாவை பார்த்து முகத்தை உடைத்துவிடுவேன் என மிரட்டல் விடுத்தார். மேலும், என்னை எதுவும் செய்ய முடியாது. நீ என்ன வேண்டுமானாலும் செய்துகொள் என பேசிய வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க;- ஓபிஎஸ் மாநாட்டில் சசிகலா? 24-ம் தேதிக்குப் பிறகு இபிஎஸ் தரப்பு தெறிச்சு ஓடப்போறாங்க! அலறவிடும் வைத்திலிங்கம்.!
இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் இதுபோன்ற மாற்றுத்திறனாளிக்கு மிரட்டல் விடுத்து பேருந்தில் ஏற்ற மறுத்த நடத்துனர் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை சச்சின் சிவா முன்வைத்தார். இந்நிலையில், பேருந்தில் நடத்தினர் ராஜா முதற்கட்டமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.